#image_title
சில்க் ஸ்மிதா ஆந்திர பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர். நடிகை அபர்ணாவின் டச்சப் கலைஞராக தனது வாழ்கையை தொடங்கிய சில்க் ஸ்மிதா, சிறிய குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். தமிழில் இயக்குனர் வினு சக்கரவர்த்தி மூலம் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது.
சில்க் ஸ்மிதா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர். 1980கள் மற்றும் 90களில் முற்பகுதியில் இந்தியாவின் மிகப் பிரபலமான நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்பட்ட நடிகராகவும் இருந்தவர் சில்க் ஸ்மிதா.
தனது 18 ஆண்டு கால சினிமா பயணத்தில் கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சில்க்ஸ்மிதா. தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகையாகவும் சிறந்த நடன கலைஞராகவும் இருந்தவர் சில்க் ஸ்மிதா. 1979 ஆம் ஆண்டு வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் தனது பெயருக்கு பின்னால் சில்க்ஸ்மிதா என்று வைத்துக்கொண்டார். பார்ப்போரை கிரங்கடிக்கும் கண்களும் முகப்பாவனைகளுக்காக ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.
அனைத்து முன்னணி நடிகர்களும் இயக்குனர்களும் தங்கள் படத்தில் சில்க் ஸ்மிதாவை நடிக்க வைக்கவே விரும்பினர். அத்தனை படங்களிலும் அவ்வளவு பிசியாக நடித்தார். முழு படத்தில் இல்லை என்றாலும் சில்க் ஸ்மிதா ஒரு பாடலில் மட்டுமாவது நடித்தால் போதும் என்ற அளவுக்கு பேரும் புகழையும் கொண்டிருந்தவர் சில்க் ஸ்மிதா.
சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல் கவர்ச்சி நடிகைவும் இருந்தவர் சில்க் ஸ்மிதா. 1980களில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த சில்க் ஸ்மிதா அவர்களைப் பற்றி புலியூர் சரோஜா ஒரு நேர்காணலில் ஒரு விஷயத்தை பகிர்ந்து இருப்பார்.
அவர் கூறியது என்னவென்றால், 80களில் ஒரு திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா உடன் நம்பியார் நடனம் ஆவது போல் ஒரு காட்சி படமாக்கப்பட இருந்தது. அப்போது பட சூட்டிங்கின் போது சில்க் ஸ்மிதா நம்பியாரை பார்த்து இவர் எல்லாம் ஏன் இந்த வயசுல டான்ஸ் ஆட வராரு, பேசாம ஏதாவது ஒரு சிறிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கலாமே என்று கூறி அசிங்கப்படுத்தி இருக்கிறார். அப்போது முன்னணி மூத்த நடிகர்கள் எல்லாம் வந்தாங்கன்னா எல்லாரும் ரொம்ப மரியாதையா நடத்துவாங்க ப்ரொடியூசர் எல்லாம் கொஞ்சம் பயப்படுவாங்க. அப்படியே சில்க் ஸ்மிதா இப்படி டக்குனு சொன்னதும் ப்ரொடியூசர் ரொம்பவே பயந்துட்டார்.
உடனே ப்ரொடியூசர் நம்பியாரிடம் போய் ஐயா மன்னிச்சிடுங்க அந்த பொண்ணு ஏதோ தெரியாம பேசிடுச்சு நீங்க ஏதும் மனசுல வச்சுக்காதீங்க என்று சொல்லி இருக்காரு. உடனே நம்பியார் பரவாயில்ல சின்ன பொண்ணு தானே அப்படின்னு ரொம்ப பெருந்தன்மையா பேசி அனுப்பி இருக்காரு. இதனால் கோபம் அடைந்த ப்ரொடியூசர் சில்க் ஸ்மிதாவை திட்டியிருக்கிறார். அவர் எவ்ளோ பெரிய வில்லன் நடிகர் தெரியுமா அவரை இப்படி ஏன் பேசுனீங்க என்று கடுமையாக பேசியுள்ளார்.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…