1 வருடத்திற்கும் மேல் விளையாடாத சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி கிடைத்தது எப்படி..? வெளியான பரபரப்பு தகவல்…!!

Spread the love

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய டி20 அணி நேற்று தெரிவிக்கப்பட்டது. அடுத்த வருடம், டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால், இந்த தேர்வு மிகவும் முக்கியமானது.

அதிரடியாக விளையாடும் ஜெய்ஸ்வால், ஐ.பி.எல்.,லில் அசத்தும் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் சுப்மன் கில்லும், இந்த அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், யாரும் எதிர்ப்பாராத விதமாக சுப்மன் கில்லுக்கு, துணை கேப்டனாக பதவி வழங்கப்பட்டது. சுப்மன் கில்லுக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கௌதம் கம்பீர் தான் அவருக்கு, துணை கேப்டன் பதவியை வழங்க வேண்டும் என வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்சர் பட்டேலை தான், துணை கேப்டனாக நியமிக்க, அகர்கர் தலைமையிலான குழு, முடிவு செய்தது. ஆனால் ஆன்லைன் மூலம் ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற்ற கௌதம் கம்பீர், “அடுத்த மாதம் வந்தால் 26 வயது நிறைவடைய கூடிய கில்லுக்கு வாய்ப்பு கொடுத்தால், அவர் நீண்ட காலம் விளையாட முடியும். மேலும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு யாராவது ஒருவரை வளர்ப்பது மிக அவசியம்” என கருத்து தெரிவித்தார்.

நீண்ட நேரம் விவாதத்திற்கு பின், சுப்மன் கில்லை தவித்தால், சரியான நபரை தேர்வு குழுவால்  கண்டுபிடிக்க முடியவில்லை. சூரிய குமாரிடம் இருந்து, கேப்டன் பதவியை பெறுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று தேர்வு குழு கருதியதாக தகவல் வெளிவந்தது. சுப்மன் கில், கடந்த வருடம் ஜூலை மாதத்திற்கு பின், டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை. மேலும், டெஸ்ட் அணியில் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Srimathi

Recent Posts

“அது நீறு பூத்த நெருப்பு”… ஆளுங்கட்சியை அலறவிடும் 85% வாக்குப்பதிவு… ஸ்டாலினுக்கு மரண அடி?… அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அந்த ரகசிய அறிக்கை…!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

2 minutes ago

“உன்னைப் பார்த்தா எனக்கு அந்த உணர்வே வரல”… ஐடி மாப்பிள்ளை சொன்ன காரணம்… ஆளுநரிடம் கோல்ட் மெடல் வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…

16 minutes ago

மத்திய அமைச்சருடன் காதல்..? நாடாளுமன்ற வளாகத்தில் வைரலான வீடியோ.. மௌனம் கலைத்த கங்கனா ரணாவத்..!!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…

17 minutes ago

“முன்பை விட இந்த முறை மிக மோசமாக இருக்கும்” ஈரானை இருளில் மூழ்கடிக்கத் துடிக்கும் இஸ்ரேல்… இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் பகீர் எச்சரிக்கை..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…

20 minutes ago

“சிறுநீரில் ரத்தம்.. இஸ்ரேல் பிரதமருக்கு வந்த கொடூர நோய்”… இரண்டு மாதங்களாக இஸ்ரேல் காத்து வந்த பேரதிர்ச்சி ரகசியம்…!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…

21 minutes ago

மேக்ரானின் அணு ஆயுத பிளான்.. குறிவைக்கும் புதின்.. ரஷ்யாவின் ஏவுகணைகளுக்கு இலக்காகும் ஐரோப்பிய நாடுகள்.. உலகையே உலுக்கும் பகீர் தகவல்..!!

ஐரோப்பிய நாடுகளில் பிரான்சின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்தும் திட்டத்திற்கு ரஷ்யா கடும்…

23 minutes ago