தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் ஆவார். சூர்யா கிட்டத்தட்ட 43 திரைப்படங்களை நடித்துள்ளார். சூர்யா நடிகை ஜோதிகா அவர்களை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற குழந்தைகள் உள்ளனர்.
நடிகர் சூர்யா அவரது 44 வது படமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. ஆகையால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி முதல் ஊட்டியில் தொடங்கப்பட்டது.
இப்படப்பிடிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை ஊட்டியில் நடக்க இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார் . மேலும் படப்பிடிப்பில் சண்டை காட்சி எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக சூர்யாவின் தலை அடிபட்டு காயம் ஏற்பட்டது.
உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் நடிகர் சூர்யா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் மருத்துவர் சூர்யாவிற்கு சிகிச்சை அளித்த பிறகு அவர் சிறிது காலம் கட்டாயமாக ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆகவே இந்தப் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா முழுமையாக குணமடைந்த உடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
குருகிராமில் தீபாவளி இரவு சுபம் ஜெயின் மற்றும் அவரது மனைவி காரில் சென்றபோது மர்ம கார் ஒன்று சுமார் ஒரு…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை…
சேலம் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த கண்ணகி (45) என்பவர் அஸ்தம்பட்டியில் தனியார் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் நிலையில், சேலம்,…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணி ஒருவர் எதிர்பாராத விதமாகத்…
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 10 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்து, தனது செல்லப்…
சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்த வெள்ளிப் பட்டறைத் தொழிலாளி ஜெயக்குமார் (48) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா (40) என்பவருக்கும்…