உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண விழாவில் நடத்தப்பட்ட கொண்டாட்டத் துப்பாக்கிச் சூட்டில் 5 வயது பிஞ்சுச் சிறுவன் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் கடிப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பனாகே கிராமத்தில் அண்மையில் திருமண விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வந்த அஜய் என்ற உறவினர், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு எதிர்பாராதவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த அர்ஷ் (5) என்ற சிறுவனின் உடலில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் நடந்த உடனே துப்பாக்கியால் சுட்ட அஜய் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து கடிப்பூர் காவல் சரக அதிகாரி வினய் கெளதம் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளி அஜயை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், “திருமண விழாக்களில் இத்தகைய ஆபத்தான துப்பாக்கிச் சூடுகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்” என இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்து வருகின்றன.
பீகார் மாநிலம் ஆரா பகுதியில், காதலித்துத் தம்பதியான கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கடும் கருத்து வேறுபாடு ஒரு கொடூர வன்முறையாக மாறியுள்ளது.…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணித்த…
கர்நாடக மாநிலத்தில், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த நபரால் மனமுடைந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் மாணவி விஷம்…
வழக்கமாகக் காவல்துறையைக் கண்டாலே வாகன ஓட்டிகள் அஞ்சி நடுங்குவதும், சந்துகளுக்குள் வண்டியைத் திருப்புவதும் தான் அன்றாடக் காட்சி. ஆனால் இங்கே,…
ரோப்டா தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மல்லேஸ்வரி விளக்கமளித்துள்ளார். அறுவை சிகிச்சை…
சாலையில் அசுர வேகமும் அபாயகரமான சாகசங்களும் மட்டுமே துணிச்சலின் அடையாளம் என நினைக்கும் விபரீத வேட்கை, சில நொடிகளில் வாழ்க்கையின்…