ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிக்கும் விதிகளை மீறியதாகக் கூறி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 45 வணிகக் கப்பல்களுக்கு ஈரான் அதிரடித் தடை விதித்துள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கையில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கிரீஸ், கத்தார், நெதர்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் கப்பல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் 2 கப்பல்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் பாரசீக வளைகுடா நீர்வழி ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, தங்களது கடல்சார் விதிமுறைகளுக்கு இணங்காத கப்பல்கள் எதிர்காலத்தில் அபராதம், தடுத்து வைத்தல் அல்லது பறிமுதல் செய்தல் போன்ற கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளது. மேலும், வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்காலச் சிக்கல்களைத் தவிர்க்க, கப்பல்களை வாடகைக்கு எடுப்பதற்கு முன்பாகவே தங்கள் இணையதளத்தில் உள்ள “விதிமுறைகளுக்கு உட்படாத கப்பல்களின்” பட்டியலைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தத் தடையால் இந்தியாவிற்கு உடனடியாகப் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் மற்றும் இந்தியா இடையே வலுவான ராஜதந்திர உறவு நிலவுவதாலும், தற்போதைக்கு 2 இந்தியக் கப்பல்கள் மட்டுமே இதில் பாதிக்கப்பட்டுள்ளதாலும், இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்தில் பெரும் பாதிப்பு இருக்காது என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அதேவேளையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. Kpler தரவுகளின்படி, 10-நாட்கள் சராசரியான 15 கப்பல்களுக்குப் பதிலாக, சமீபத்தில் வெறும் 5 சரக்குக் கப்பல்கள் மட்டுமே இந்த நீர்வழிப்பாதையைக் கடந்து சென்றுள்ளன. அமெரிக்கா-ஈரான் இடையே போர் முடிவுக்கு வந்திருந்தாலும், அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயாராகி வருவதால், அப்பகுதியில் வர்த்தகப் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…