Categories: சினிமா

மலிவு விலையில் தங்கம்.. 90 லட்சம் அபேஸ்.. விஜய் பட நடிகை மீது மோசடி வழக்கு.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!

Spread the love

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் சேர்ந்து மலிவு விலையில் தங்கம் என்று மோசடி செய்த வழக்கில் போலீசார் விசாரணை செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷில்பா செட்டி. தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழர்களுக்கு பரிச்சயமானவர். 49 வயதான நிலையிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு சினிமாவில் கலக்கி வருகின்றார். இவரது கணவர் ராஜ் குந்த்ரா. இவர் இடையில் ஆபாச படங்கள் எடுத்து அதனை பிரத்தியேக செயலி மூலம் ஒளிபரப்பிய குற்றச்சாட்டுக்காக அண்மையில் கைதானார்.

இதன் மூலமாக மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தனர். அதைத்தொடர்ந்து சமீபத்தில் தான் ராஜ் குந்த்ரா ஜாமினில் வெளியானார். இந்நிலையில் தற்போது இவர் மீது வைக்கப்பட்ட மற்றொரு புகார் விசாரணைக்கு வந்துள்ளது. சில வருடத்திற்கு முன்னர் சத்யுப் கோல்ட் என்கின்ற தங்கத்திட்டங்களுக்கான ஒரு நிறுவனத்தை ஷில்பா மற்றும் ராஜகுந்திரா தம்பதியினர் தொடங்கியிருந்தார்கள்.

இதன் மூலம் ஏரி இறங்கும் தங்கத்தின் விலை குறித்து கவலைப்படாமல் சொக்க தங்கத்தை பெற முடியும் என்று கூறினார்கள். மலிவு விலையில் தங்கம் கிடைக்கும் என்று நம்பி பலரும் இதில் பணம் போட்டார்கள். இந்த வாக்குறுதியை நம்பி தங்க வர்த்தகரான கோத்தாரி என்பவர் 90 லட்சம் வரை முதலீடு செய்திருந்தார். மேலும் முதலீடு காலத்தில் கூடுதல் லாபத்துடன் தங்க கட்டிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள் இந்த பாலிவுட் தம்பதிகள்.

இதனால் அதனை நம்பி கோத்தாரி பல நாட்கள் காத்திருக்கின்றார். ஆனால் முதிர்வு நாளான 2019 ஏப்ரல் 2 தினத்தை கடந்த பிறகும் ஷில்பா மற்றும் ராஜ் தம்பதி சொன்னபடி தங்கத்தை வழங்காமல் இழுத்து அடித்துக் கொண்டிருந்தனர். தங்கம் தரவில்லை என்றாலும் தான் கட்டிய தொகையாவது திருப்பிக் கொடுங்கள் என்று கோத்தாரி கேட்டபோதும் ஷில்பா தரப்பிலிருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதையடுத்து காவல்துறையினரிடம் கோத்தாரி புகார் அளித்தார். தன்வசம் இருந்த அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தார். அதன் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்வதாக கூறி இருந்த நிலையில் முறையாக விசாரணை நடத்தவில்லை. இதனால் தனது புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணை மேற்கொள்ளாத காரணத்தினால் மும்பை நீதிமன்றத்தை நாடினார் கோத்தாரி.

இதனை விசாரித்த சென்சஸ் நீதிமன்றம் கோத்தாரியின் புகாரை உடனடியாக உரிய முறையில் விசாரித்து தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எம்எல்எம் திட்டத்துடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ராஜ் குந்த்ரா அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணையில் சிக்கினார்கள்.

ஷில்பா ஷெட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த மும்பை பிளாட் உள்ளிட்ட 97 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கினார்கள். அது மட்டும் இல்லாமல் சினிமா ஆசை காட்டி பல இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபலங்களும் தங்கள் வாழ்க்கையை கெடுத்து விட்டதாக புகார் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Mahalakshmi

Recent Posts

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

6 minutes ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

11 minutes ago

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

21 minutes ago

“அவருக்கு பதவி கொடுத்தது ஏன்…?” எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி பதில்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…

28 minutes ago

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…

42 minutes ago

“சினிமாவே வேண்டாம்…!” மக்கள் என்னை நிராகரிச்சிட்டாங்க…கண்ணீருடன் முடிவெடுத்த சமந்தா… தடுத்து நிறுத்திய அந்த ஒரு நபர்…!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…

44 minutes ago