ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்… திமுக கூட்டணியில் இருந்து விலகும் முக்கிய கட்சி?…. பரபரப்பு பேட்டி….!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதி என குரல் எழுப்பி வருவதால் ஸ்டாலினுக்கு இது மிகப்பெரிய சிக்கலாகவே மாறி உள்ளது.

கூடுதல் தொகுதிகளை திமுக ஓதுக்காவிட்டால் தமிழக வெற்றி கழகம் கட்சியில் கூட்டணி அமைக்க போவதாக காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. இப்படியான சூழலில் ஸ்டாலினுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் குரல் எழுப்பியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை நாங்கள் கேட்டு பெறுவோம்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம். அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தில் உள்ள சில குறைகளை களைய வேண்டும். ஆட்சியில் தவறு நடக்கும் பட்சத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. ஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது. தமிழக மக்கள் பிரிவினைவாத தேக்கடிக்கு வாக்களிக்க மாட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் இடங்கள் குறைவாக இருந்தாலும் அவர்களை கடந்து சென்று விட முடியாது என்பது வாக்காளர்களுக்கு நன்கு தெரியும் என்று அவர் பேசியுள்ள நிலையில் தற்போது இது ஸ்டாலினுக்கு புதிய சிக்கலாக மாறி உள்ளது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

1 மணத்தியாலம் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

1 மணத்தியாலம் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

1 மணத்தியாலம் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

2 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

2 மணத்தியாலங்கள் ago