மகாராஷ்டிரா சட்டசபைக்கு ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனா எம்எல்ஏ சரத் சோனாவனே சிறுத்தை வேடமணிந்து வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நாகபுரி நகரின் பர்டி பகுதியில் நேற்று சிறுத்தை தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தையை பிடித்தனர். சிறுத்தை தாக்குதலால் மாநிலம் முழுவதும் மக்கள் கடும் பீதியில் இருந்து வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு செயலாக ஜூன்னார் தொகுதி எம்எல்ஏ சரத் சோனாவனே சிறுத்தை வேடமடைந்து சட்டசபைக்கு வந்தார். பூனேமாவட்டத்தில் உள்ள ஜூன்னார் தாலுகாவில் மட்டும் சிறுத்தை தாக்குதலால் கடந்த 3 மாதங்களில் 55 பேர் பலியாகி உள்ளனர். அந்தப் பகுதி மக்கள் பலத்த பீதியில் உள்ளனர். எனவே இப்படி வேடமணிந்து வந்தேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…