திருச்சி மாவட்டம் மன்னச்சநல்லூர் அடுத்த திருவெள்ளறைரில் உள்ள புண்டரீகாக்ஷாப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களின் நான்காவது திருத்தலமாக விளங்குகின்றது இந்த கோவில் சுமார் 1000 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமாக நந்தவனம் ஒன்று உள்ள நிலையில் இதில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த சுரேஷ் என்பவர் பட்டப்பகலில் கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணுடன் நந்தவனத்தில் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைப் பார்த்த பக்தர்கள் கோவிலில் புனிதம் கெட்டு விட்டதாக கூறி கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக கோவில் மேற்பார்வையாளர் சுரேஷிடம் கேட்டபோது, நான் 2016 ஆம் ஆண்டில் பணிக்கு சேர்ந்தேன். இதுவரை என் மீது எந்த குற்றச்சாட்டும் வந்தது இல்லை. 54 வயதாகிறது, எனக்கு திருமணம் ஆகவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டேன், இதுபோன்று இதுவரை நடந்ததில்லை, அதற்காக நான் வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதம் ஆகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மறைவான இடங்கள் மற்றும் பூங்காக்களில் பெண்ணிடம் அத்துமீறும் சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கோவில் நந்தவனத்தில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடவுளின் மீது நம்பிக்கை கொண்ட பலரும் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரும் நிலையில் கோவிலுக்குள் கோவில் பணியாளர் பெண்ணுடன் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அவர் மீது இதுவரை நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…