#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். சினிமாவில் கலக்கி வரும் இவர் சமீபத்தில் வெளியிட்ட அரசியல் அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. தற்பொழுது GOAT திரைப்படத்தில் நடித்து வரும் இவர், அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதற்காக அவர் தற்பொழுது ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் அரசியல் கட்சி ஒன்றையும் தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜயின் ஷாஜகான் படத்தில் இன்னொரு ஹீரோவாகவே நடித்திருந்த நடிகர் கிருஷ்ணா திவாகரின் சமீபத்திய பேட்டி ஒன்று தற்பொழுது திடீரென இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் கே.எஸ். ரவி இயக்கத்தில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான ஷாஜகான் படத்தில் இன்னொரு ஹீரோவாகவே நடித்திருந்தவர் நடிகர் கிருஷ்ணா திவாகர்.
ஹீரோயின் ரிச்சா பாலோட் கடைசியில் விஜய்யை விரும்பவில்லை நடிகர் கிருஷ்ணா திவாகரைத் தான் விரும்புகிறார் என்பதை தெரிந்ததும் உடைந்து போகும் விஜய் தனது காதலியின் காதலை சேர்த்து வைப்பது போல அந்த படத்தை இயக்குநர் காதலுடன் கலந்து உருவாக்கி இருப்பார். ஆனால், ஷாஜகான் படத்திற்கு பிறகு கிருஷ்ணா திவாகர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் நடிகர் விஜய் குறித்து கேட்கப்பட்ட போது ‘ இப்போ அவரு வேற லெவலில் இருக்கிறார். போன் அடிச்சு அவரு செகரட்ரி கிட்ட பேச முயற்சி செஞ்சேன். சார் நான் விஜய் சார் கிட்ட பேசணும்னு கேட்டேன். ஷாஜகான் படத்துல செகண்ட் ஹீரோவா அவர் கூட நடிச்சேன்னு சொன்னேன். அதுக்கு அவர், ஷாஜஹான் படத்துல நடிச்ச விஜய் சார் இல்ல இப்ப அவரு, இப்ப அவர் பீஸ்ட் விஜய் சார்-னு சொல்லிட்டாரு.
அவர் கிட்ட பேசுற டைம் நமக்கு முடிஞ்சிருச்சு. அதான் லை ஃப். நான் இப்ப திரும்பவும் தமிழ் சினிமால என்ட்ரி கொடுக்கணும்னு முயற்சி செய்றேன். இப்ப எல்லாம் வாய்ப்பு டக்கு டக்குனு கிடைச்சிருது. நிறைய நடிகர், நடிகைகள் இங்கே இருக்காங்க. ஷாஜகான் படத்துல எனக்கு கிடைச்ச அந்த அடையாளத்தை நான் சரியா யூஸ் பண்ணிக்கல. அந்த சமயத்துல படிப்பு தான் முக்கியம்னு படிக்கப் போயிட்டேன். அதுக்கு அப்புறமா மலையாள திரைப்படங்கள் நடிச்சிருக்கேன்.
இப்போ தமிழ் மக்கள் என்ன மறந்துட்டாங்க . தமிழ்ல எனக்கு அவ்ளோ இம்பார்ட்டன்ஸ் இதுவரைக்கும் கிடைக்கல. விஜய் சார் கூட நடிக்கும் போது நமக்குள்ள ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வரும். விஜய் சார் ஒரு சிம்பிள் மேன்” என்று கூறியுள்ளார். இந்த பேட்டியானது தற்பொழுது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
நடிகர் விஜய் நடித்த படங்களில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படம் சிவகாசி. இந்த படத்தின் இயக்குனர் பேரரசு. சமீபத்தில்…
சைக்கிள் மெக்கானிக்காகத் தொழில் செய்து வரும் ஒரு தந்தை, தனது ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் மகனைச் சீரிய முறையில் படிக்க வைத்தார்.…
தமிழக அரசு சார்பில் சமீபத்தில் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது.…
தன் கடையில் வேலை செய்யும் ஊழியரைச் சொந்தக் குடும்ப உறுப்பினராகக் கருதி, அவருக்கு வளைகாப்பு நடத்திய நகைக்கடை உரிமையாளரின் செயல்…
சேலம் புகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (பிப். 2, 2026) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK)…
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவது தமிழக அரசியல் களத்தில்…