இமாச்சலப் பிரதேசத்தில் 3 குழந்தைகளுக்குத் தந்தையான நபர் ஒருவர், 13 வயது சிறுமிக்கு சிப்ஸ் மற்றும் ஆப்பிள் தருவதாக ஆசை காட்டி பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு முதலில் சிப்ஸ் கொடுத்து ஆசை காட்டிய அந்த நபர், பின்னர் ஆப்பிள் தருவதாகக் கூறி லாரிக்கு பின்னால் அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அலறி அழுதுள்ளார். அழுதுகொண்டே ஓடிய சிறுமி, அருகில் இருந்த கடைக்காரரிடம் நடந்த கொடூரத்தை கூறி அழுதுள்ளார்.
சிறுமியின் நிலையைக் கண்டு கொதித்தெழுந்த கடைக்காரரும் அப்பகுதி மக்களும், அந்த நபரைப் பிடித்து முதற்கட்டமாக கோழி போல நிற்க வைத்து, சிறுமியின் கையாலேயே செருப்பால் அடிக்க வைத்துள்ளனர். சுமார் 3 மணி நேரம் பொதுமக்கள் அவருக்குக் கடும் தர்ம அடி கொடுத்து, பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகையில் நடைபெற்ற 'பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி மாநாடு' நிகழ்வில் பங்கேற்ற ஆதிதிராவிடர் நலத்துறை…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான தீவிர அதிருப்தி காரணமாக, வரும் தேர்தலில் கட்சி தோல்வியடைந்தால் மட்டுமே தங்கள் எதிர்காலத்திற்கு…
அதிமுக தலைமையை விஜயின் தவெக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்துள்ள விளக்கம் தமிழக…
தவெக மற்றும் பாமக இடையே கூட்டணி அமையவுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான…
சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எவ்வித முன்அறிவிப்புமின்றி ரூ.66.50 வரை உயர்த்தப்பட்டுள்ளதால், இதன்…
தொர்ரூர் பகுதியில் குடும்பத் தகராறு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக 25 வயதான அங்கிதே சின்னப்பள்ளி என்ற திருமணமான பெண்…