சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகாம், பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹரிப்பிரியா.
சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவரை இசை என்றால் தான் பலருக்கும் தெரியும்.அந்த அளவிற்கு பிரியமானவள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஹரிப்பிரியா.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் நடித்தார். பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பிரியமானவள் என்ற சீரியலில் இசை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி என்ற சீரியலிலும் இவர் நடித்துள்ளார். இப்படி சீரியலில் பிஸியான நடிகையான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் உள்ளார். ஆனால் சில வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.பிரிவிற்குப் பிறகு ஹரிப்பிரியா தனது கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
தற்போது இவர் தொகுப்பாளர் மற்றும் நடிகை என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஹரிப்ரியா. இவர் தற்பொழுது படு மாடர்ன் லுக்கில் புகைப்படங்களை வெளியிட அவரா இது? என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…