தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள், பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் நடிகர் சஞ்சீவ். தளபதி விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பரான இவர் ஆரம்ப காதலத்தில் விஜய்யுடன் இணைந்து ஒருசில படங்களில் துணை நடிகராக தனது நடிப்பை தொடங்கினார். அதன்பிறகு சின்னத்திரை பக்கம் வந்த நடிகர் சஞ்சீவ் திருமதி செல்வம் தொடர் மூலம் முழுநேர சீரியல் நடிகராகவே மாறிவிட்டார்.
அதனை அடுத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிவந்த நடிகர் சஞ்சீவ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோகினி தொடரில் நடித்துவந்தார். தற்போது அந்த தொடரில் இருந்து விலகி சன் டீவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் பிசியாக நடித்துவருகிறார் சஞ்சீவ்.
நடிகர் சஞ்சீவும் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி என்பவரும் திருமணம் செய்துகொண்டனர். இவருக்கு லயா என்ற மகளும், ஆதவ் என்ற மகனும் உள்ளனர். தற்பொழுது ப்ரீத்தி சன் டீவியில் ஒளிபரப்பாகிவரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வருகிறார்.பொம்மலாட்டம், பந்தம், ஆண்டாள் அழகர் போன்ற பிரபல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ப்ரீத்தி சஞ்சீவ். இவர் இவர் தற்பொழுது தனது மகன் கராத்தே கற்றுக் கொள்ளும் வீடியோவை இணையத்தில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…