கோவை தெற்கு தொகுதி தேர்தல் களம் தற்போது அண்ணாமலை மற்றும் செந்தில் பாலாஜி இடையேயான கடுமையான விமர்சனங்களால் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுகவை மிகக்கடுமையாகச் சாடினார். குறிப்பாக, செந்தில் பாலாஜியை “நம்பர் 1 புரோக்கர்” என்று விமர்சித்த அவர், 2024 மக்களவைத் தேர்தலைப் போலவே தற்போதும் திமுக பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திப்பதாகக் குற்றம்சாட்டினார். கரூரில் இருந்து வந்திருக்கும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கோவை வீதிகளில் பணத்தையும், பரிசுப் பொருட்களையும் இறைப்பதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, அரவக்குறிச்சி தேர்தலில் தான் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என சவால் விடுத்தார்.
அண்ணாமலையின் இந்த விமர்சனங்களுக்கு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தனது பாணியில் மிகத் தீவிரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். “அண்ணாமலை ஏற்கனவே மாநிலப் பொறுப்பில் இருந்தபோது மக்களை வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒருமுறையோ நேரில் சந்தித்தாரா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் வந்தவுடன் மட்டும் தினமும் மக்களைப் பார்ப்பது போன்ற நாடகத்தை அண்ணாமலை ஆடுவதாகக் கிண்டல் செய்தார். மேலும், கடந்த முறை அரவக்குறிச்சி தேர்தலில் அண்ணாமலை வாக்காளர்களுக்கு 1000 ரூபாய் கொடுத்தது ஊரறிந்த விஷயம் என்றும், அதற்கு முதலில் அவர் பதில் சொல்லட்டும் என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செந்தில் பாலாஜி, அண்ணாமலையின் பழைய பேச்சுகளைச் சுட்டிக்காட்டி வசைபாடினார். “அறிவாலயத்தில் அடிச் செங்கல் வரை உருவுவேன் என்று அண்ணாமலை முன்பு சவால் விட்டார், ஆனால் இப்போது அவரே செங்கல் உருவிப் போய் நிற்கிறார்” என்று எள்ளி நகையாடினார். அண்ணாமலையின் அரசியல் நாகரிகமற்ற முறையில் இருப்பதாகவும், அவர் போய் “டவுசரைப் போட்டுக்கொண்டு வேலையைப் பார்க்கட்டும்” என்றும் மிகவும் கடுமையான மற்றும் தனிப்பட்ட ரீதியிலான விமர்சனங்களை முன்வைத்தார். யார் எங்கே இருக்க வேண்டுமோ, அவர்கள் அங்கே தான் இருக்கிறார்கள் என அண்ணாமலைக்குச் சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காததையும் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
இரு தலைவர்களுக்கும் இடையே நிலவும் இந்தப் பகை, கோவை மண்டலத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கொங்கு மண்டலத்தில் தான் திமுகவின் தோல்வி தொடங்கும் என அண்ணாமலை ஆரூடம் கூற, செந்தில் பாலாஜியோ அண்ணாமலையின் அரசியல் செல்வாக்கு சரிந்துவிட்டதாகக் கூறுகிறார். பணப்பட்டுவாடா புகார்கள், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் பழைய அரசியல் சவால்கள் எனத் தமிழக அரசியலின் தற்போதைய பேசுபொருளாக கோவை தெற்கு தொகுதி மாறியுள்ளது. இந்தத் தேர்தல் மோதல் வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…