விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது வரை 38 நாட்களை நிறைவு செய்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 5 வைல்ட் கார்டு என்ட்ரிகளும் நுழைய மொத்தம் 23 போட்டியாளர்கள் களமிறங்கினர்.
இவர்களில் தற்பொழுது வரை 7 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று ஒளிபரப்பான பிக் பாஸ் எபிசோடில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதன்பின் பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து வைல்ட் கார்டு போட்டியாளரான அன்னபாரதி வந்த வேகத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்ததற்காக தற்பொழுது வரை சோசியல் மீடியாவில் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் பிரதீப் கூலாக அந்த ரெட் கார்டுடன் ,தன்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய புகைப்பங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் இதைப்பற்றி பேசி ஸ்மால் பாஸ் வீட்டினர் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் பேசி சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘To all supporters. I think, I’m done with all this BB stuff. There will be haters, creating hate is business for a lot of youtubers and content creators. Vazhattum. I really want to create my own content and don’t want to be stuck in this. Freeya vidunga.’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…