“தைரியம் இருந்தா என் மேல வழக்கு போடுங்க”… தவெக தலைவர் விஜய்க்கு ஓப்பனாக சவால் விட்ட திமுக மூத்த தலைவர்….!

Spread the love

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிநாளில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவையில் பேசிய விஜய், கடந்த கால ஆட்சிகள் குறித்தும், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் குறித்தும் சில கதைகளை மேற்கோள் காட்டி திமுக அரசை மறைமுகமாகவும் நேரடியாகவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். சட்டமன்றத்தில் அரங்கேறிய முதலமைச்சர் விஜய்யின் இந்த விமர்சனக் கணைகள், ஆளுங்கட்சி தரப்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு திமுக தரப்பிலிருந்து தற்பொழுது மிகக் கடுமையான எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன.

முதலமைச்சர் விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு, திமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து மிகவும் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் விஜய் இன்னும் தன்னை ஒரு நடிகராகவே நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்; கள யதார்த்தம் என்னவென்று தெரியாமல், யாரோ எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை அப்படியே சட்டமன்றத்தில் வந்து படிக்கிறார்” என்று மிகக் காட்டமாகச் சாடினார். மேலும், சினிமா பாணியில் சட்டமன்றத்தில் வசனம் பேசுவது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு எவ்விதத்திலும் உதவாது என்றும், முதலமைச்சர் விஜய் முதலில் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அட்வைஸ் செய்யும் தொனியில் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து தவெக தலைவரை நோக்கிப் பாய்ந்த சிவசங்கர், தவெக ஆட்சியில் எவ்வித ஊழலும் இல்லை என்றும், இதுவரை நடந்தது எல்லாமே ஊழல் ஆட்சி என்றும் ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க விஜய் திட்டமிட்டு முயன்று வருவதாகக் குற்றம் சாட்டினார். “எங்கள் மீது ஊழல் புகார் கூறும் நீங்கள், தைரியம் இருந்தால் என் மீது கூட ஒரு வழக்கு போட்டுப் பாருங்கள்; நாங்கள் இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் இல்லை” என்று சவால் விடுத்தார். அதோடு நின்றுவிடாமல், இந்திரா காந்தியின் மிசா காலத்தையே பார்த்து, எத்தனையோ கைதுகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட பாரம்பரியம் மிக்க பேரியக்கம் திமுக என்பதை விஜய் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் தனது பேட்டியில் மிக ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார்.

Nanthini

Recent Posts

மும்பையில் பயங்கரம்… பள்ளிப் பேருந்து மீது வேரோடு சாய்ந்த மரம்… 11 வயது சிறுவன் பலியான பரிதாபம்….!

மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…

8 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய பைக்… மகாராஷ்டிராவில் கொடூரம்….!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…

8 மணத்தியாலங்கள் ago

நாத்தனாருக்கு 10% சொத்து, 50 கோடி வரதட்சணை… கல்யாண சந்தையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… வைரலாகும் சின்மயியின் ஆவேசப் பதிவு…!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…

8 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… ஒரு போட்டோவிற்காக இந்த கொடூர சண்டை…? நடுரோட்டில் பாக்ஸிங் செய்து கொண்ட நேபாள இளைஞர்கள்…!”

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…

8 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா… இதென்ன அநியாயம்..?! குப்பை வண்டியில் கட்டி 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பசுவின் சடலம்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…

8 மணத்தியாலங்கள் ago

ஐந்து நாட்கள், 30 கொடூரர்கள்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அந்த 5 நாள் நரகம்… ராஜஸ்தானை உலுக்கிய கொடூரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…

8 மணத்தியாலங்கள் ago