தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீப காலமாகவே அரசியல்கலத்தில் விறுவிறுப்பான செயல்பாடுகளிலும் நீண்ட நேர உரைகளாலும் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றார். குறிப்பாக ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு பின்னர் அவருடைய பேச்சிலும் அரசியல் அணுகுமுறையிலும் தெளிவான மாற்றம் தெரிகிறது. இதனுடன் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக் கொள்ளும் சில முக்கிய மாற்றங்கள் நடக்க தொடங்கியுள்ளன. ஈரோடு கூட்டத்தில் பேசிய விஜய், அண்ணாவும் எம்ஜிஆர்வும் தமிழ்நாட்டின் சொத்துக்கள் எனவும் அவர்களின் பெயரை பயன்படுத்த யாருக்கும் உரிமை மறுக்க முடியாது எனவும் கூறினார்.
மேலும் இந்த இரண்டு தலைவர்களும் 10 ஆண்டு இடைவெளியில் தமிழ்நாட்டு அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் எனவும், அதனைப் போலவே ஒரு அரசியல் மாற்றத்தை தமிழக வெற்றிக்கழகம் உருவாக்கும் எனவும் பேசி இருந்தார். இந்த பேச்சு தமிழக வெற்றி கழகம் தொண்டர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் விஜய்யின் உரைகள் அதிமுகவை மறைமுகமாக குறைத்து மதிப்பீடும் விதமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
அதிமுகவை பலம் குறைந்த கட்சி போல காட்டுவதன் மூலமாக தமிழக வெற்றிக்கழகம் வளருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொடர்ந்து விஜய் இவ்வாறு பேசினால் வரப்போகின்ற தேர்தலில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் ஆதரவாளர்கள் இடையே கடும் வார்த்தை போர்களும் தீவிர பிரச்சார மோதல்களும் ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சில மூத்த தலைவர்கள் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைவதற்கு தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் விஜய் அடுத்த பொது கூட்டத்தை கொங்கு மண்டலத்தில் உள்ள சேலத்தில் நடத்தை விருப்பம் தெரிவித்துள்ளாராம். இதற்காக வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்ற வருகிறது. சேலம் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உறுதியான அரசியல் கோட்டையாக கருதப்படும் தொகுதி ஆகும். அங்கு அவருக்கு வலுவான கட்சி அமைப்பும் நீண்ட கால ஆதரவாளர்களும் இருக்கின்றன.
இப்படியான சூழலில் சேலத்தில் விஜய் பொதுக்கூட்டம் நடத்திய அதிமுகவை விமர்சித்தால் அது இரு கட்சிகளுக்கும் இடையே ஆன அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என்று தெரிகிறது. தமிழக வெற்றிக்கழகம் இந்த கூட்டத்தின் மூலம் அதிமுக ஓட்டுக்களை ஓரளவு அசைக்கலாம் என்றாலும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் அடித்தளத்தை யாராலும் எளிதில் கலைக்க முடியாது என அதிமுக தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது. அதே சமயம் அதிமுக தலைப்பிலிருந்து அடுத்ததாக விஜய் கட்சியில் யார் இணைய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் அதிகரித்துள்ளது.
தமிழக அரசியலில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது குடும்பப் பூசலால் பிளவுபட்டுள்ள நிலையில், டாக்டர்…
வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் முழுமையாகக் கலைந்துவிடாத நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு…
ஆளி விதை நீர்: தயாரிக்கும் முறையும் ஆரோக்கியத் தொடக்கமும் ஆளி விதைகள் மட்டுமின்றி, அதன் நீரும் உடல் நலத்திற்கு ஒரு…
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு…
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில், திமுகவின் இளம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட திடீர்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா ஒரு…