அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கூறியதை தொடர்ந்து அவரது கட்சி பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். இருந்தாலும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்த நிலையில் ஓபிஎஸ் உடன் ஒரே காரில் செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு சென்றதைத் தொடர்ந்து மொத்தமாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் செங்கோட்டையன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் செங்கோட்டையன் எம் எல் ஏ பதவியை இன்று ராஜினாமா செய்து உள்ள நிலையில் நாளை விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணையும் செங்கோட்டை எனக்கு முக்கிய பதவியை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆனந்துக்கு இணையான அதிகாரம் செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன் கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் 9 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அதன் பிறகு எட்டு முறை கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…