அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவ.27) விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தவெக கட்சியின் துண்டை செங்கோட்டையன் தோளில் போட்டார். அப்போது அதை தோளில் இருந்து எடுத்து செங்கோட்டையன் “துண்டு போட்டா கிண்டலடிப்பாங்க” என கூறினார். இதனால் ஆதவ் அர்ஜுனா அதை எடுத்துள்ளார்.
பின்னர் பேசிய அவர், த.வெ.க.வில் நான் இணைந்ததற்கு பல காரணங்கள் உண்டு. திமுகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல. ஒன்றாக இணைந்து தான் பயணிக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வேண்டும். பள்ளிக்குழந்தைகள் தங்களது பெற்றோரிடம், “அப்பா, அம்மா, விஜய்க்கு ஓட்டு போடுங்க” என்று கூறும் நிலை தமிழ்நாட்டில் தற்போது உள்ளது. தூய்மையான ஆட்சி நடத்த ஒருவர் தேவை என்பது மக்கள் மனதில் தோன்றிவிட்டது. இளவல் விஜய் இதற்காக மாபெரும் இயக்கத்தை கட்டமைத்திருக்கிறார் என கூறினார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…