BREAKING: நொடிக்கு நொடி பரபரப்பு… இன்னும் சற்றுநேரத்தில் விஜய்யுடன் கூண்டோடு இணைகிறார்….!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர படுத்தியுள்ளன. தேர்தல் களத்தில் கட்சிகள் நேரடியாக செயல்பட தொடங்கும் முன்னரே கூட்டணி பேச்சு வார்த்தைகள் மற்றும் அரசியல் வியூகங்கள் மறைமுகமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் அண்மைக்கால அரசியல் நகர்வு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அரசியல் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் செங்கோட்டையன் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். பல வருடங்களாக அதிமுகவில் முக்கிய அங்கம் வகித்த இவர் அண்மையில் கட்சியின் தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இவருடைய நீண்ட அரசியல் அனுபவத்தையும் கட்சிக்குள் இவருடைய பங்களிப்பையும் கருத்தில் கொண்டு இந்த நீக்கம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. கட்சியை விட்டு நீக்கப்பட்ட கையோடு செங்கோட்டையன் திடீரென்று டெல்லி பயணம் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார். இந்த பரபரப்பான சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் இது ஒரு உயர்மட்ட ரகசியமான சந்திப்பாக பார்க்கப்பட்டது. தேசிய அரசியலில் செல்வாக்கு மிக்க அமித்ஷாவுடன் மாநில அளவில் கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஒரு தலைவர் சந்திப்பு நடத்தியது செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு தேசிய தலைமையின் ஆலோசனையின் பேரில்தான் இருக்கும் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இப்படியான நிலையில் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில் இன்று விஜய் தலைமையிலான தமிழக விபத்து கழகம் கட்சியில் இணைய இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் விஜய் செங்கோட்டையனுக்கு அரசியல் அனுபவத்திற்கு ஏற்ப முக்கிய பொறுப்பை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் முன்னிலையில் இன்று செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளது தான் இன்றைய ஹாட் டாபிக்காக உள்ளது. மேலும் அவருடைய ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்தியபாமா, அதிமுக முன்னாள் நிர்வாகிகள் கந்தவேல் முருகன், சுப்பிரமணியன், குறிஞ்சிநாதன், மௌடிடீஸ்வரன், முத்துசாமி மற்றும் ரமேஷ் உள்ளிட்டோ வரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளன. இது விஜய்க்கான கொங்கு அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Nanthini

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

1 மணத்தியாலம் ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

1 மணத்தியாலம் ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

2 மணத்தியாலங்கள் ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

2 மணத்தியாலங்கள் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

2 மணத்தியாலங்கள் ago