தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தல் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் வருகை என்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சமீப காலமாகவே தமிழக வெற்றி கழகம் கட்சியின் முக்கிய அமைச்சர்களின் வருகையும் தொண்டர்களின் இணைவும் அதிகரித்து வருகிறது. அதன்படி அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார்.
இவருக்கு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இவர் சேர்ந்த பிறகு தான் நாஞ்சில் சம்பத் மற்றும் சில அதிமுகவின் முக்கிய முகங்கள் விஜய் கட்சியில் இணைந்தனர். இதனால் இவர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர்ந்தது விஜய்க்கு அடித்த அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்களை தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர்க்கும் பணியை செங்கோட்டையன் தற்போது தீவிர படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எங்கு நின்றாலும் டெபாசிட் இழக்க செய்வதை நோக்கம் என செங்கோட்டையன் பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் எனக்கு வேண்டியவர், அவருக்கு என் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை, TVK இன்னும் வளரவில்லை. எடுத்ததும் ஆட்சிக்கு வருவோம் என்றால் எப்படி நியாயம் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தன்னை டெபாசிட் இழக்க செங்கோட்டையன் நெல்லையில் போட்டியிடுகிறாரா என்பது பற்றி தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். இருந்தாலும் இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…