தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்ற நிலையில், அதில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள சூழலில், மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முக்கியக் கூட்டத்தில், மேற்கு மண்டலத்தின் முகமாக அறியப்படும் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் ஏன் வரவில்லை என்பது விவாதப் பொருளாக மாறியது.
இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தவெகவின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கடுப்புடன் பதில் அளித்தார். செங்கோட்டையன் தற்போதைய தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெறவில்லை என்றும், அவர் கட்சியின் பிரச்சாரக் குழுவில் முக்கியப் பொறுப்பில் இருப்பதாகவும் விளக்கமளித்தார். தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையை பெரிதாக்குவதாகக் கூறி செய்தியாளர்கள் மீது அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அருண்ராஜின் கோபத்தைத் தொடர்ந்து குறுக்கிட்ட மற்றொரு நிர்வாகியான ஜே.சி.பி. பிரபாகர், நிலைமையைச் சமாளிக்க முற்பட்டார். கட்சியின் தலைவர் விஜய் அனைத்து நிர்வாகிகளுக்கும் சமமான அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு குழுக்களை அமைத்துள்ளதாகவும், யாரையும் புறக்கணிக்கும் எண்ணம் கட்சிக்கு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். திறமைகளின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் பேசிய அருண்ராஜ், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் பொதுக்கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தைக் குறிவைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். சிறுபான்மையினரை திமுக அரசு வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவதாகவும், தவெக தலைவர் விஜய் சிறுபான்மையினரின் உண்மையான தலைவராக விளங்குவார் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…