வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளேன்… செல்வப்பெருந்தகை பரபரப்பு பதிவு..!!

Spread the love

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூரில் இந்தி பேசும் வருமான வரித்துறை அதிகாரிகளால் தான் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். சோதனை என்ற பெயரில் மத்திய அரசு தன்னை முடக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரத்திற்காகத் தமிழகம் வந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது திட்டமிட்ட அரசியல் சதி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசு விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதாகவும், இது ஒரு ஜனநாயக விரோதப் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் செல்வப்பெருந்தகை சாடியுள்ளார். இத்தகைய அச்சுறுத்தல்களுக்குத் தான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும், மக்களின் ஆதரவோடு தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

இது மனிதனா அல்லது இயந்திரமா..? கண்சிமிட்டும் நேரத்தில் ரூபிக் கியூப் புதிரை உடைத்த சிறுவன்: வியப்பில் இணையம்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளம் 'ஸ்பீட் கியூபர்'  மிகக் குறுகிய காலத்தில் ரூபிக் கியூபைத்…

1 minute ago

“ஒரு நன்றியை கூட சொல்லாத காங்கிரஸ்”… ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்… தமிழக அரசியலில் அரங்கேறும் அதிரடி திருப்பம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவியது. இதுகுறித்துப் பதிவிட்டுள்ள திமுக…

3 minutes ago

“ஒரே ஒரு தங்கச்சி… ₹50 லட்சத்தில் ஒரு வீடு.. தந்தையில்லா குறையை போக்கிய அண்ணன்கள்.. இணையத்தை நனைக்கும் பாசப் போராட்டம்.!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசிக்கும் இரண்டு சகோதரர்கள், தங்களது ஒரே சகோதரிக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் வகையிலான ஒரு…

3 minutes ago

50 ஆண்டு கால அனுபவம்… முதல் முறை கையில் எடுக்கும் அஸ்திரம்…தவெக அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்ட ‘அந்த’ பவர்ஃபுல் துறை….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில்,…

12 minutes ago

BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்… காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்….!

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கார்த்திக், தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது அக்கட்சி…

21 minutes ago

“ரூ. 152 கோடி Vs ரூ. 68 லட்சம்”… கோடீஸ்வர எம்எல்ஏக்கள் எந்த கட்சியில் அதிகம்… வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் சொத்து விவரங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயக…

28 minutes ago