தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை நிலைநாட்டி விடலாம் என்று செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளார். இருந்தாலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் முக்கிய புள்ளிகள் பலரும் மாற்று கட்சிகள் இணைந்து வருகின்றன.
இந்நிலையில் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது செல்லூர் ராஜுவை இபிஎஸ் தன்னுடைய காரில் ஏற்க மறுத்த வீடியோ வைரலாகி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படியான நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள செல்லூர் ராஜு, பாதுகாவலர்களின் கட்டுப்பாட்டின்படியே தான் இபிஎஸ் காரில் ஏறவில்லை என்றார். மேலும் திமுகவில் தான் இணைய உள்ளதாக வெளியான தகவலில் கடுகளவும் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அதிர்ச்சிகரமான…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஆட்சி அமைப்பதில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகளால் உலக அளவில் எரிசக்தி…
தமிழக அரசியலில் தற்பொழுது நிலவி வரும் பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அமமுக பொதுச்செயலாளர்…