தமிழக சட்டமன்றத்தில் 2026-2027 நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் அவை கூடிய நிலையில், மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட துறைகள் மீதான விவாதத்தில் பங்கேற்க உறுப்பினர்கள் வருகை தந்தனர். அப்பொழுது, பேரவை வளாகத்திற்குள் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் திமுக எம்.எல்.ஏ சேகர்பாபுவும் ஒன்றாக நடந்து வந்த காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த வருகையின் போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டு வர, திடீரென அந்த போனை வாங்கி சேகர்பாபுவும் தொடர்ந்து சில நிமிடங்கள் பேசியுள்ளார். பரம எதிரிகளாகக் கருதப்படும் திமுக மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இருவரும் ஒரே செல்போனை மாற்றி மாற்றிப் பேசி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள இந்தச் சூழலில், திமுக-அதிமுக உறுப்பினர்களின் இந்த நெருக்கம் பல்வேறு ஊகங்களைக் கிளப்பியுள்ளது. அதிமுக கொறடாவின் போனில் சேகர்பாபு பேசியது எடப்பாடி பழனிச்சாமியிடம் தானா என்றும், பேரவைக்குள் தவெக அரசை எதிர்கொள்ள இரு கட்சிகளும் மறைமுகமாக கைகோர்க்கிறார்களா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கை கோரப்பட்டுள்ள சூழலில், எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரான அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் திமுகவின் சேகர்பாபு இணைந்து செயல்படுவது போன்று எழுந்த இந்த வீடியோ அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…