நடிகர் விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று தர்மதுரை படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. விஷ்ணு விஷால் நடித்த நீர்ப்பறவை மற்றும் கோழிப்பண்ணை செல்லதுரை போன்ற படங்களையும் இயக்குனர் சீனு ராமசாமி டைரக்ட் செய்திருக்கிறார். சமீபத்தில் அந்தோணி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, இலங்கையில் ஒரு சினிமா எடுத்து அந்த படத்தை தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் விநியோகம் செய்வது என்பது பெரிய விஷயம்.
ஒரு நாடு போருக்குப் பிறகு சிதைந்த பிறகு அந்த நாட்டில் வாழ்க்கை என்பது கேள்விக்குறிதான். குண்டு விழுந்த சத்தம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். எல்லா வகையிலும் அடக்கு முறையை சந்தித்து வரும் ஜனங்களின் குரல்தான் இந்த படம். எதையோ ஒன்றை மறைக்க எதையோ ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் வாழ்க்கை என்றாகி விட்டது. மனித வாழ்க்கையில் எல்லாமே பணமாகி விட்டது.
பார்க்க வைக்கப்படும் கேட்க வைக்கப்படும் உலகத்தில் மக்கள் வாழ்கிறார்கள். நம்மை வேடிக்கை பார்க்க வைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட உலகத்தில் இலங்கை தமிழ் மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக இந்த படம் காட்சிப்படுத்தி இருப்பதை வாழ்த்துகிறேன் என்று இயக்குனர் சீனு ராமசாமி அந்த விழாவில் பேசியிருக்கிறார்.
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…
தமிழக அரசியல் வரலாறு 1967-ல் காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு அண்ணா தலைமையிலான திமுக மற்றும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக என…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய ஆபத்துகளும் உலகளாவிய விவாதப்பொருளாக மாறியுள்ளன. ஜெமினி, சாட்ஜிபிடி,…
ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு அடுத்தடுத்து இரு வெற்றிகளைப் பெற்று மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு…