“ஜோதிடர் சொல்றதை செய்யுறவருக்கு எதுக்கு CM பதவி?”…. ஜோசியரையே CM ஆக்கிவிட்டு போயிருக்கலாம்…. முதலமைச்சர் விஜய்யை மேடையிலேயே வாரி முடிச்ச சீமான்….!

Spread the love

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தவெக ஆட்சியில் ரூல்ஸ் எதுவுமில்லை, வெறும் ரீல்ஸ் மட்டும்தான் உள்ளது” என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இதனையொட்டி, தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், பதவி ஆசைக்காக இரு தொகுதிகளில் போட்டியிட்டு, பின்னர் ஒன்றில் பதவி விலகி மீண்டும் இடைத்தேர்தலைத் திணிப்பது மக்கள் பணத்தை வீணடிக்கும் தண்டச்செலவு என சாடினார். மேலும், “முதலமைச்சர் பதவியில் ஆள் மாறியிருக்கிறாரே தவிர ஆட்சி அதிகாரம் மாறவில்லை; வேட்டி-சட்டை அணிந்தவருக்குப் பதிலாக இப்போது கோட்-சூட் போட்டவர் உட்கார்ந்திருக்கிறார். சமூக வலைத்தளங்களைத் திறந்தாலே முதலமைச்சர் விஜய் இங்கு போனார், அங்கு போனார் என்ற செய்திகள் மட்டுமே வருகின்றன. ஜோதிடர் சொல்வதைக் கேட்டு ஆட்சி நடத்துவதற்கு, அந்த ஜோதிடரையே முதலமைச்சராக்கி விட்டிருக்கலாம்” என்றும் அவர் எள்ளி நகையாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் வேறொரு கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கினால், மக்கள் எப்படி இருந்தாலும் வாக்களித்து விடுவார்கள் என்ற அரசியல்வாதிகளின் மெத்தனப்போக்கை மக்கள் முறியடிக்க வேண்டும் என்றார். சுயநல அரசியலுக்காகத் தேர்தல்களைத் திணித்து மக்கள் பணத்தைச் சூறையாடும் இந்த நடைமுறை தடுக்கப்பட வேண்டும் என்றும், தற்போதைய அடிப்படை அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இறுதியாகத் தனது கட்சியின் நிலைப் பற்றிக் குறிப்பிட்ட சீமான், “நாம் தமிழர் கட்சி இதுவரை சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஒருபோதும் மக்களை விட்டு விலகியதில்லை. தோற்றுத் தோற்று வென்றவனின் இதயம் இரும்பை விடக் கடினமாக இருக்கும்; நாங்கள் வெற்றியைத் தொடர்ந்து விரட்டிக்கொண்டிருக்கிறோம். எவ்வளவு பெரிய பயணமும் ஒரு காலடித் தடத்தில்தான் தொடங்கும் என்பதால், தாராபுரம் மக்கள் வரலாற்றை மாற்றி எழுதி நாதக வேட்பாளர் கார்த்திகாவை வெற்றி பெற வைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

Nanthini

Recent Posts

“யாராவது காப்பாத்துங்க… ஏரியில் கேட்ட அலறல் சத்தம்”…. ஓடிச்சென்று உயிரைக் காப்பாற்றிய மா.சுப்பிரமணியன்….. வேடந்தாங்கல் ஏரியில் நடந்த நிஜ த்ரில்லர் சம்பவம்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளரும்…

2 seconds ago

“புதுசா வந்தவங்களுக்கு சீட்டா?… தொண்டர்கள் என்ன லூசா?”…. “கூட்டணியில இருந்துகிட்டே இப்படி ஒரு குண்டா?”… CM விஜய்யை வெளுத்து வாங்கிய கார்த்தி சிதம்பரம்….!

அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…

8 minutes ago

இடைத்தேர்தல் விலகலுக்கு பின்னால் ஜான் ஆரோக்கியசாமி…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்… சாய்ந்த அன்புமணி… வெளிவந்த உண்மை….!

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…

13 minutes ago

“மாற்றுத்திறனாளி மகனின் சிகிச்சை…” கழுத்தை அறுத்து கொன்ற கணவர்… அலறி துடித்த மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…

16 minutes ago

“உங்க பொண்ணு தனியா போறா…” இரவில் வீட்டை விட்டு போன 14 வயது சிறுமி… தேடி அழைத்து வந்த பெற்றோர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…

24 minutes ago