சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கியப் பொருளாதார மையங்கள் மற்றும் குடியிருப்புகளைக் குறிவைத்து ஈரான் ஏவிய 4-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமாங்களை (Drones) சவுதி பாதுகாப்புப் படை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியது. கடந்த சில வாரங்களாக சவுதியின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், சவுதி அரசு இந்த அதிரடித் தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தங்களின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் சகித்துக்கொள்ள முடியாது என சவுதி பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்தத் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் ராணுவ அதிகாரி (Military Attaché), அவரது உதவியாளர் மற்றும் மூன்று தூதரக ஊழியர்கள் என மொத்தம் 5 பேரை ‘Persona Non Grata’ (வரவேற்கப்படாத நபர்கள்) என சவுதி அறிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சவுதி வெளியுறவு அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரானின் இத்தகைய அத்துமீறல்கள் சர்வதேச சட்டங்களையும், இரு நாடுகளுக்கு இடையேயான பெய்ஜிங் ஒப்பந்தத்தையும் மீறுவதாகச் சவுதி குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு, தற்போது அண்டை நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ஜோர்டான், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றன. சவுதி அரேபியா எடுத்துள்ள இந்தத் தூதரக ரீதியான நடவடிக்கை, வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நேரடி ராணுவ மோதலாக உருவெடுக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…