Categories: சினிமா

சத்யராஜுக்கு இப்படி ஒருப் பழக்கம் இருக்கா?… ரஜினியே கேட்டு ஷாக் ஆன சம்பவம்!

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.

2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவரை இன்று வரை பிஸியான நடிகராக வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தற்போது இந்தி படங்கள் வரை நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தற்போது கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்தோடு ‘கூலி’ திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சத்யராஜ் ஒரு நிகழ்வில் பேசும்போது தனக்கிருக்கும் ஒரு பழக்கம் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் என்னுடைய ஹிட் படங்கள் பலவற்றை தியேட்டரில் பார்த்ததே இல்லை. என்னுடைய ‘அமைதிப்படை’ படத்தையோ வால்டர் வெற்றிவேல் படத்தையோ நான் தியேட்டர் சென்று பார்த்ததில்லை.

ஒரு முறை மிஸ்டர் பாரத் ரிலீஸான சமயம். நான் ஏவிஎம்-ல் ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது ரஜினி சார் பதற்றமாக என்னிடம் ‘சத்யராஜ் மிஸ்டர் பாரத் பாத்துவிட்டீர்களா? படம் பற்றி என்ன டாக்? எனக் கேட்டார். நான் இன்னும் படம் பார்க்கவில்லை என்றேன். அவர் உங்களுக்குப் பதற்றமாகவே இல்லையா? எப்படி இவ்வளவு ரிலாக்ஸாக இருக்கிறீர்கள் எனக் கேட்டார்.” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

காதலனா? கொலையாளியா?… அடர்ந்த காட்டுக்குள் உல்லாசம்… கடைசியில் சடலமாக மீட்கப்பட்ட செவிலியர்… அதிர்ச்சி பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே, தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த 26 வயதான உத்திரா மர்மமான முறையில் மாயமான…

2 minutes ago

“15 ஆண்டுகால சித்திரவதை…” தப்பியோடிய சிறுவன் மீது காரை ஏற்றி எலும்புகளை நொறுக்கிய கொடூரம்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ….!!

பெற்ற தாயால் கைவிடப்பட்டு அனாதை இல்லத்தில் வளர்ந்த சிறுவன் ஒருவன், அங்கு ஏற்பட்ட கொடூரச் சித்திரவதைகளிலிருந்து தப்பியோட முயன்றபோது, அவர்…

5 minutes ago

ஸ்கார்பியோ காரின் வெறித்தனமான ஸ்டண்ட்…! அலறியடித்து ஓடிய மக்கள்…. நடுரோட்டில் பயங்கரம்…. பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில், துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது ஸ்கார்பியோ கார் ஒன்று நடுரோட்டில் ஆபத்தான சாகசங்களைச் செய்து பொதுமக்களை…

15 minutes ago

“சூப்பர் உமன்”… எமனுக்கே சவால் விட்ட காதலி… மின்னல் தாக்கிய காதலன்… 2 முறை மறுபிறவி கொடுத்த வீரப்பெண்மணி… நடுங்க வைத்த இடி மின்னல்…!!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த நிக் ப்ரோடெரிக் மற்றும் ஈவா ப்ரோடெரிக் தம்பதியினர், வனப்பகுதி ஒன்றில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தபோது திடீரென…

16 minutes ago

தீபாவளி சர்ப்ரைஸ்..! பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்… தேதி மாறுது… நவம்பர் 15 வரை காத்திருக்க வேண்டாம்… தமிழக அரசின் சூப்பர் பிளான்…!!

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சுமார் 1.31…

22 minutes ago

ரியல் ஹீரோ!.. சமையலறையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ… தெய்வமாய் நுழைந்த டெலிவரி ஏஜென்ட்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பார்சல் வழங்கச் சென்ற டெலிவரி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தை சாதுரியமாக…

29 minutes ago