#image_title
தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்தவர் நடிகர் பிரசாந்த். அதையடுத்து அவர் பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து 90 களில் சாக்லேட் பாய் கதாநாயகனாக வலம் வந்தார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். ஆனால் 2000 களுக்குப் பிறகு அவரின் மார்க்கெட் டல்லானது. இடையில் அவரின் திருமண வாழ்க்கையும் சிக்கலில் முடிந்ததால் அவரால் சினிமாவில் தொடர்ச்சியாக கவனம் செலுத்த முடியவில்லை.
அதனால் அவர் சினிமாவில் நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் தெலுங்கு படமொன்றில் குணச்சித்திர வேடத்தில் நடித்தது ரசிகர்களுக்கு இடையே சோ கத் தை ஏற்படுத்தியது. அதையடுத்து இப்போது விஜய்யின் கோட் திரைப்படத்திலும் செகண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார்.
நீண்ட ஆண்டுகளாக அவர் நடிப்பில் ரிலீஸாகாமல் இருந்த அந்தகன் திரைப்படம் தற்போது ரிலீஸாகி அவருக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் பிரசாந்த் எப்படி சினிமாவுக்குள் வந்தார் என்பது குறித்து ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அதில் “பிரசாந்தை ஹீரோவாக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. அவரை டாக்டர் ஆக்கவேண்டும் என்றுதான் ஆசை. என் அப்பா டாக்டர். என்னால் டாக்டர் ஆகமுடியவில்லை. அதனால் பிரசாந்தை டாக்டர் ஆக்கவேண்டுமென்று அதற்கேற்றார் போல தயார் செய்தேன்.
அப்போது ஒரு நாள் என்னை பார்க்க நடிகர் சத்யராஜ் சார் வந்துள்ளார். அப்போது பிரசாந்தைப் பார்த்து அவர் ஆச்சர்யமடைந்துள்ளார். தியாகராஜன் சாருக்கு இவ்ளோ அழகா பெரிய பையன் இருக்காரா என்று கேட்டுள்ளார். அவர் போய் இண்டஸ்ட்ரி முழுக்க பிரசாந்தைப் பற்றி சொல்லியுள்ளார். அதுவரை யாருக்கும் எனக்கு கல்யாணம் ஆனதே தெரியாது. பிரசாந்த் பற்றி தகவல் பரவியதும் 30க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் பிரசாந்துக்குக் கதை சொல்ல வந்தனர். அப்படிதான் முதல் முதலாக ஒரு மலையாள படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதும் அடுத்தடுத்துப் பட வாய்ப்புகள் வந்தன. அப்படிதான் அவர் ஒரு விபத்தாக சினிமாவுக்குள் வந்தார்” எனக் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…