கட்சியை கடன் வாங்கிய சசிகலா..? “தென்னந்தோப்பு” சின்னத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்…. 10 ஆண்டு கால அரசியல் பிளாஷ் பேக் இதோ…!!

Spread the love

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சசிகலா, தற்போது தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தும் வகையில் ‘அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியை அறிவித்துள்ளார். சிறை மீண்ட பிறகு டிடிவி தினகரன் உள்ளிட்ட நம்பிக்கைக்குரியவர்கள் விலகிய நிலையில், பிப்ரவரி 14-ஆம் தேதி கமுதியில் கொடியை அறிமுகம் செய்தவர், தற்போது கட்சியின் பெயரையும் ‘தென்னந்தோப்பு’ சின்னத்தையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தில் முறைப்படி விண்ணப்பிக்காமலேயே இந்த அறிவிப்பு எப்படி சாத்தியமானது என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த அதிரடி அறிவிப்பின் பின்னணியில் ஒரு சுவாரசியமான அரசியல் பிளாஷ் பேக் ஒளிந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த எம்ஜிஆர் சிவ (எ) சக்கரவர்த்தி என்பவர், கடந்த 2016-17 காலப்பகுதியிலேயே இதே பெயரில் ஒரு கட்சியைப் பதிவு செய்து, ‘தென்னந்தோப்பு’ சின்னத்தையும் தேர்தல் ஆணையத்திடம் பெற்று வைத்திருந்தார். நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த அந்த அரசியல் கட்சியை மீட்டெடுத்த சசிகலா, சக்கரவர்த்தியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அதே பெயரையும் சின்னத்தையும் தனது அரசியல் பயணத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.

இருப்பினும், தொண்டர்களைக் கவரும் வகையில் கட்சியின் கொடியில் மட்டும் சில முக்கிய மாற்றங்களைச் சசிகலா செய்துள்ளார். சக்கரவர்த்தி முன்பு பதிவு செய்திருந்த கொடியில் இருந்த நீல நிறம் மற்றும் எம்ஜிஆர் படத்தை நீக்கிவிட்டு, அதிமுகவின் அடையாளமான கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரின் படங்களும் இடம்பெறும் வகையில் மாற்றப்பட்ட இந்தக் கொடி, அதிமுகவின் உண்மையான வாரிசு தாம்தான் என்பதைக் காட்டும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

2 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

4 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

4 மணத்தியாலங்கள் ago