அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமாக இருந்த வைத்திலிங்கம் திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ள சசிகலா, அதிமுகவின் மூத்த முன்னோடியாக இருந்த ஒருவரின் இந்த மாற்றம் மிகவும் துரதிஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார். தாய் கழகத்திலிருந்து விலகி, அவர் ‘தீய கழகத்தில்’ தன்னை இணைத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட சசிகலா, இதனை அவரது தொகுதி மக்களும் தொண்டர்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
கட்சியின் தற்போதைய நிலைக்கு சிலரின் சுயநலமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள சசிகலா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கம் ஏழை எளிய மக்களுக்கானது என்று நினைவு கூர்ந்தார். ஜெயலலிதா காலத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவை தேடி வந்த நிலையில், தற்போது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே ராஜினாமா செய்துவிட்டு பிற கட்சிகளுக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய செயல்கள் “நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது” என்று அவர் சாடியுள்ளார்.
திமுகவை வீழ்த்த புதிய வியூகங்களை வகுத்து வருவதாகக் கூறியுள்ள சசிகலா, தனது இறுதி மூச்சு வரை திமுக என்ற தீய சக்தியை எதிர்ப்பதே தனது இலக்கு என்று உறுதியளித்துள்ளார். தமிழக மக்களின் நலனுக்காகவும், அதிமுகவை காக்கவும் தான் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும், அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து களம் காண வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றத் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்பதே அவரது தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…