Categories: சினிமா

நெருங்கிய திருமண தேதி.. தலைவர் முதல் கனிமொழி எம்பி வரை.. நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சரத்குமார் குடும்பம்..!

Spread the love

திருமண தேதி நெருங்கி வருவதால் சரத்குமார் மற்றும் ராதிகா வரலட்சுமி சரத்குமார் மூவரும் பிரபலங்களின் வீட்டுக்கு சென்று பத்திரிகை வைத்து வரும் நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சரத்குமாருக்கும் அவரின் மூத்த மனைவி சாயாதேவி இருவருக்கும் பிறந்தவர்தான் வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார். இதில் வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக இருந்து வருகின்றார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக சிம்பு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கா,ர் இரவின் நிழல் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைப்படங்களின் நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வளம் வருகின்றார். சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர் ஹீரோயினியாக மட்டுமில்லாமல் சர்க்கார், சண்டைக்கோழி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்தார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான வீரசிம்ஹாரட்டி, மைக்கல், ஹனுமன் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகை வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் மும்பையில் மிக சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

பெற்றோர் முன்னிலையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நிக்கோலய் சச்தேவ்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். வரலட்சுமி சரத்குமார் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கின்றார் . தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் ஒரு ஆர்ட் கேலரியை வைத்திருக்கின்றார்.

தனது அப்பா தொடங்கிய இந்த ஆர்ட் கேலரியை தனது 16 வயதில் இருந்து கவனித்து வருகின்றார். திருமணம் அடுத்த மாதம் அதாவது ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் நடைபெற உள்ளதாகவும், பின்னர் லீலா பேலஸில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் நடிகர் சரத்குமாரும் நடிகை ராதிகாவும் வரலட்சுமி சரத்குமார் உடன் சேர்ந்து பல பிரபலங்கள் வீட்டிற்கு சென்று பத்திரிக்கை வைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அழைப்பிதழ் வைத்த நிலையில் அதைத்தொடர்ந்து நடிகர் பிரபு வீட்டிற்கு சென்று பத்திரிக்கை கொடுத்து இருக்கிறார்கள் பின்னர் நடிகர் பாலா, வந்தனா, நடிகர் கமலஹாசன் மற்றும் கனிமொழி எம்பி வீட்டிற்கு சென்று திருமண அழைப்பிதழ்களை கொடுத்திருக்கிறார்கள் இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தையும் வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

 

Mahalakshmi

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

6 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

6 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

6 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago