#image_title
சில சமயங்களில் வெளியாகும் சில படங்களை பார்க்கும் போது, நம்மையே திரையில் பார்க்கும் படியாக இருக்கும். பெரிய அளவில் மாஸ் சீன்கள், குத்து பாடல்கள், அளவுக்கு மீறிய காதல் என்ற வகையில் இல்லாமல், சிம்பிளாக அன்றாட வாழ்க்கையில் நடைபெறுவதாக அமைந்திருக்கும் ஒரு சில படங்கள். அதேப் போல, இன்றைய காலகட்டத்தில், பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு வேண்டும் என்பதைக் காட்டிலும் அதிகமாக கொடுத்து அவர்களை சொந்தமாக யோசிக்கவே விடுவதில்லை. மாற்றாக, அவர்களுக்கு இது தான் நல்லதாக இருக்கும் என பிள்ளைகளின் விருப்பத்தைக் கேட்காமல் அவர்களே ஒன்றை செய்வர். அப்படி செய்யும் போது பிள்ளைகளின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை வெளிப்படையாக காட்டியத் திரைப்படம் சந்தோஷ் சுப்ரமணியம்.
#image_title
2008-ம் ஆண்டு எம்.ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, ஜெனிலியா, பிரகாஷ் ராஜ், சந்தானம் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் சந்தோஷ் சுப்ரமணியம். செல்வந்தராக இருக்கக் கூடிய சுப்ரமணியம், தனது பிள்ளைகளுக்கு அவர்கள் வேண்டுவதைக் காட்டிலும் அதிகமாக கொடுக்கும் பழக்கம் கொண்டவர். அது அப்பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாற்றாக இருந்தாலும், அவர் கூறுவது தன் சரி என அவர்களையே நம்ப வைத்து விடுவார். அப்படியான குடும்பத்தில் வளர்பவர் ஜெயம் ரவி. அப்பாவின் பெயரை பயன்படுத்தாமல் அவரது கம்பெனியை எடுத்து நடத்த விருப்பமில்லாமல் தானே சுயமாக ஒரு பிசினஸ் செய்ய வேண்டும் எனவும், தனக்கு பிடித்தமான ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைப்பார்.
#image_title
ஆனால் அப்படியான பெண்ணை பார்ப்பதற்குள் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயம் நடக்க, தனக்கு பிடித்தமான ஜெனிலியாவை அவர் பார்த்து பழகி, காதலில் விழ, இந்த விவகாரம் தந்தை சுப்ரமணியத்திற்கு தெரியவர, முதன் முறையாக தந்தை எதிர்த்து பேசுவார் சந்தோஷ். அவரது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வாரம் ஜெனிலியாவை தனது வீட்டில் தங்க வைக்க ஒப்புக்கொள்வார் சுப்ரமணியம். அந்த ஒரு வாரத்தில் சந்தோஷை பற்றின விஷயங்களை அப்பெண் மூலம் தெரிந்து கொள்வர் சுப்ரமணியத்தின் குடும்பம். இறுதியில், அந்த குடும்பத்திற்கும் நமக்கும் செட் ஆகாது என ஜெனிலியா வீட்டை விட்டு செல்ல, சந்தோஷ் சோகத்தில் மூழ்க, இறுதியாக தனது மகனைப் பற்றி முழுமையாக தந்தை தெரிந்து கொள்வது தான் படத்தின் கிளைமேக்ஸ்.
#image_title
இந்தக் கிளைமேக்ஸ் காட்சியானது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட காட்சி. உணர்ச்சிபூர்வமாக தனது உணர்வுகளை முதன் முறையாக தந்தை முன் மகன் கூறுவதே இந்த கிளைமேக்ஸ் காட்சி. சிறு வயதில் இருந்து தந்தைக்காக தான் இழந்ததை எதார்த்தமாக கண்ணீர் மல்க சந்தோஷ் கூறும் அந்தக் காட்சி தான் படத்தின் ஹைலேட். பிலிமில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சியின் போது உணர்ச்சிப் பொங்க சந்தோஷ் பேசிக் கொண்டிருக்கும் போது, பிலிம் பாதியிலேயே தீர்ந்து விட்டதாம். என்ன செய்வதென்று தெரியாமல் ரீடெக் போகும் போது, ஒரு இடத்தில் மட்டும் சந்தோஷின் தொண்டைக்கு மட்டும் க்ளோசப் எடுத்ததை வைப்பதா வைக்க வேண்டாமா என்பதற்கே பெரிய விவாதம் நடைபெற்றதாக இயக்குநர் ராகேஷ் ஒரு நெர்காணலில் கூறியிருக்கிறார்.
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…
தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க…
சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகின் பேராளுமையான 'புதுமைத்தேனீ' மா. அன்பழகன் அவர்கள், தனது 83-வது வயதில் காலமான செய்தி…
வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் கழிக்கப்படும்போது ஏற்படும் பதற்றம் இனி இருக்காது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை (e-mandate) விதிகள்…