இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன், நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தனது சொந்த ஊரான திருவனந்தபுரம் மைதானத்தில் விளையாடினார். உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய அவர், 6 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுமையான தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தும், இந்த தொடரில் அவர் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறியது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஏற்கனவே இஷான் கிஷன் அதிரடி சதம் விளாசி பார்மில் இருக்கும் நிலையில், சஞ்சு சாம்சனின் இந்த சரிவு அவரது எதிர்கால வாய்ப்புகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் சஞ்சுவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், மற்ற வீரர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் வாய்ப்புகள் சஞ்சு சாம்சனுக்கு மறுக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்து வருகின்றன.
இந்த இக்கட்டான சூழலில், சஞ்சு சாம்சனின் மனைவி சாருலதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல முடியாது. சில நேரங்களில் பதில்கள் மங்கி மறையும்போது, வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். ஏனென்றால் வாழ்க்கையை சில தருணங்களில் எந்த விளக்கமும் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தத்துவார்த்தமாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்று போட்டி நடந்த போது சாருலதா மைதானத்தில் அமர்ந்து சஞ்சுவுக்காக பிரார்த்தனை செய்த வீடியோவும் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சுவின் ஆட்டம் விமர்சனத்திற்கு உள்ளானாலும், அவரது மனைவி அளித்துள்ள இந்த மனரீதியான ஆதரவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பலரும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…