சென்னை பாலன் இல்லத்தில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் தொடங்கும் போராட்டங்களின் எதிரொலியாக தமிழகத்திலும் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் இப்போராட்டத்திற்கு நேரில் சென்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை சனம் ஷெட்டியும் வெள்ளிக்கிழமை இரவு இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தார். மேடையில் பேசிய அவர், “இது மாணவர்களின் உண்மையான போராட்டம்; ஆனால் மேடையை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துபவர்களே ஜோக்கர்கள். நான் விஜய் அவர்களின் தீவிர ரசிகை, அவரது ‘ஜனநாயகன்’ படத்தை நேற்றுதான் பார்த்துவிட்டு வந்தேன்” என்று குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு போராட்டக்களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான சூழலில், அதைப்பற்றி மேடையில் பேசியதற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். சனம் ஷெட்டி “நான் பேசவா, வேண்டாமா?” என கேட்டதற்கு, போராட்டக்காரர்கள் உடனடியாக வெளியேறுமாறு பதிலளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சனம் ஷெட்டி, “இது பேச்சுரிமையை பறிக்கும் செயல்; மாணவர்களுக்காக பேச நானாகவே வந்தேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சனம் ஷெட்டி, “மக்களுக்காக பேசும்போது கையில் இருக்கும் மைக்கை பிடுங்கி வெளியேற்றுவது தான் ஜனநாயகமா? இது ஒரு போலி போராட்டம்” எனக் கடுமையாக குற்றம்சாட்டினார். சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை போராட்ட மேடையில் பேசியதால் ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணாமலை தொடங்கியுள்ள 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளராகக் கரு. நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜாகவிலிருந்து விலகி இந்த…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அமையவிருந்த மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அறிவிக்கையை தமிழ்நாடு அரசு…
கொளத்தூர் தொகுதி பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தனியார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அவரது ஆரோக்கியம் குறித்து அமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், பெண் ஒருவர் தனது மாமியார் மற்றும் நாத்தனாரால் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ…
தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று…
பெங்களூரு யலஹங்காவில் 13 வயது சிறுவன் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாஸ்கர் ரெட்டி…