தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு அரசன் என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்க உள்ளது. அதன்பிறகு கோவில்பட்டியில் அடுத்த 3வது ஷெட்யூல் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி கூறியதாவது, நானும் அரசன் படத்தில் நடிக்கிறேன். இதில் சிம்பு – தனுஷ் மோதல் இருக்குமா என்று தெரியாது. நான் இருக்கிறேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறினார். அரசன் படத்தின் கதையில் அனைத்து சம்பவங்களும் இருக்கிறது. ஒவ்வொரு முறை வெற்றிமாறன் கதை சொல்லும் போதும் அது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
அரசன் படத்திற்கு ஒரு பெரிய உழைப்பு தேவை. அதை தவிர வேறு எதையும் இப்போதைக்கு சொல்ல முடியாது என்று இயக்குனர் சமுத்திரக்கனி அப்போது கூறியிருக்கிறார். வடசென்னை படத்தில் குணா கேரக்டரில் நடித்தவர் சமுத்திரக்கனி. அவருடன் அமீர் கிஷோர் ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இப்போது அவர்கள் அனைவருமே அரசன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக்கைதிகள் திடீரென தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.…
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே தாமரைப்பூ பறிப்பதில் ஏற்பட்ட தகராறில், புதிதாகத் தந்தையான 27 வயது இளைஞர் கவின் கத்தியால்…
மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள தனியாமங்கலம் கிராமத்தில் விளையாடச் சென்ற 7 வயது சிறுவன் முத்துவேல், மர்மமான முறையில் பாழடைந்த…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
ஆப்பிரிக்க நாடான காபோன் கடற்கரைக்கு அருகே, எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 'ப்ராஸ்பெக்டர் 5' (Prospector 5)…
கடந்த 15 ஆண்டுகளாக உகாண்டா நாட்டை உலுக்கி வந்த கொடூர சீரியல் கில்லரும், மனித மாமிசம் தின்னும் பழக்கம் கொண்டவனுமான…