இந்தியப் பிரீமியர் லீக் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகம் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான். 2008-ஆம் ஆண்டு முதல் அந்த அணிக்காக விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் ஜொலித்து வரும் தோனி, பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருந்தாலும் ஐபிஎல் போட்டிகளில் இதுவரை சதம் அடித்ததில்லை. அவரது அதிகபட்ச ஸ்கோர் 84 ரன்களாகவே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இணைந்த சஞ்சு சாம்சன், வெறும் 4 போட்டிகளிலேயே அந்த அணிக்காக சதம் விளாசிய முதல் விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து தோனியின் நீண்டகாலக் குறையை நிவர்த்தி செய்துள்ளார்.
கடந்த மூன்று போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விமர்சனங்களுக்கு உள்ளான சஞ்சு சாம்சன், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய அவர், பின்னர் டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 56 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் குவித்து தனது நான்காவது ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். குறிப்பாக, தமிழக வீரர் நடராஜனின் பந்தில் பவுண்டரி அடித்து அவர் தனது சதத்தை நிறைவு செய்தது மைதானத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. சஞ்சு சாம்சனுக்கு உறுதுணையாக இளம் வீரர் ஆயுஷ் மத்ரே 59 ரன்கள் சேர்த்தார், கடைசி நேரத்தில் சிவம் துபே அதிரடியாக சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஸ்கோரை உயர்த்தினார். 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, சிஎஸ்கே வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
அந்த அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை அணி, தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக ஏற்கனவே சதம் அடித்திருந்த சஞ்சு சாம்சன், தற்போது சென்னை அணிக்காகவும் சதம் அடித்து தனது ஐபிஎல் பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த வெற்றி சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…