நீங்கள் பிரெஷரா!… ரூ.21 லட்சம் வரை சம்பளம்.. அனுபவம் தேவையில்லை.. இன்போசிஸ் பணிக்கு ஏப்ரல் 13 கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!

Spread the love

பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் (Infosys), 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்த பிரெஷர்களுக்காக (Freshers) ஒரு பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் (L1, L2, L3) மற்றும் டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் என மொத்தம் நான்கு விதமான தொழில்நுட்பப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனுபவம் இல்லாத பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னணி நிறுவனத்தில் தங்கள் பணியைத் தொடங்கலாம்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக், எம்.சி.ஏ அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, ஏஐ/எம்எல், சைபர் செக்யூரிட்டி, இசிஇ, ட்ரிபிள்இ போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் தகுதியானவர்கள். இதில் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் L3 பதவிக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் வரையும், L2 பதவிக்கு ரூ.16 லட்சம் வரையும், L1 பதவிக்கு ரூ.10 லட்சம் வரையும் அதிகப்பட்ச ஊதியம் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் பணிக்கு ஆண்டுக்கு ரூ.6.26 லட்சம் சம்பளத்துடன் ரூ.75,000 ஜாயினிங் போனஸும் உண்டு.

தேர்வு முறையானது இரண்டு முக்கிய நிலைகளைக் கொண்டது. முதல் சுற்றில் ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வு (Written Assessment) நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் சுற்றில் 3 மணிநேரம் நீடிக்கக்கூடிய நேரடித் தேர்வு மற்றும் நேர்காணல் (In Person Assessment + Interview) நடத்தப்படும். இது முற்றிலும் புரோகிராமிங் திறனைச் சோதிக்கும் வகையில் அமையும். தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிப்பவர்களுக்கு இரண்டு முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் இன்போசிஸ் நடத்திய எந்தவொரு நேர்காணலிலும் பங்கேற்றிருக்கக் கூடாது என்பது முதல் நிபந்தனை. அதேபோல், தற்போது ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க அனுமதி இல்லை. ஒரு சிறந்த தொழில் வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் இளம் பொறியாளர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.

Muthu Mani

Recent Posts

திமுகவை மக்கள் ஏக்கத்தோடு தேடுவாங்க… பிள்ளை தன் தாயை தேடித்தானே ஓடும்… ஸ்டாலின் அறிக்கை..!!

குழந்தைகள் புதிய பொம்மையைப் பார்த்தால் அது வேண்டுமென விரும்புவார்கள், ஆனால் இரண்டு நாட்களிலேயே அது போர் அடித்துவிடும் என்பதால் அதைத்…

4 minutes ago

கூட்டணிக்காக விஜய் இதை செய்யவே கூடாது… ஜான் பாண்டியன் எச்சரிக்கை…!!

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக, தமிழக முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தீவிரமாகச் செயல்பட…

8 minutes ago

“நாங்க 94% இந்தியர்கள் சார்…” மத்திய அமைச்சருக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த அபிஜித் திப்கே… இணையத்தில் பரவும் வீடியோ…!!!

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் மற்றும் ஜார்ஜ் சோரோஸ் கும்பலிடமிருந்து பின்தொடர்பவர்களைத் தேடுபவர்களைக் கடுமையாக விமரிசித்து…

9 minutes ago

“இனி டாஸ்மாக் மூடுறது சந்தேகம் தான்”… அரசுப் பொறுப்பில் முதலமைச்சர் விஜய்யின் நண்பர்.. தமிழகத்திற்குள் நுழைந்த ஆந்திர மதுபான லாபி..?

ஆந்திர மதுபான லாபியின் (Andhra liquor lobby) நுழைவு தற்போது தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாகிவிட்டது என்று காங்கிரஸ் நிர்வாகி சுபத்ரா தேவி…

13 minutes ago

மறுபடியும் ஒரு உலகப் பேரழிவா?.. கோரத்தாண்டவம் ஆடும் எபோலா வைரஸ்… WHO விடுத்த சர்வதேச அவசர எச்சரிக்கை… நடுங்கும் உலக நாடுகள்..!!!

காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் பரவி வருவதை அடுத்து,…

15 minutes ago

சார் எங்க ஏரியால கரண்ட் இல்ல… “எம்.எல்.ஏ ஊரில் இல்லை” ஆனா அந்த ஆள் யார் தெரியுமா..? பவர் கட் குறித்து கிண்டலடித்த ஜெயக்குமார்..!!

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்…

16 minutes ago