பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை சாய் பல்லவி. அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய படங்கள் தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படுவதால் தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். அதன்படி தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகின்றார்.
இப்படி சினிமாவில் பிஸியாக நடித்து வரும் சாய் பல்லவிக்கு பூஜா என்ற ஒரு தங்கை உள்ளார். இவர் சமுத்திரகனிவுடன் இணைந்து சித்திரை செவ்வானம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சரியானது ஒரு இடத்தை பெற்றுக் கொடுக்காத காரணத்தால் சினிமாவிலிருந்து விலகிய பூஜா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். தற்போது சினிமாவில் தொடராமல் தனது காதலரை பூஜா கரம் பிடித்துள்ளார்.
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் வெளியான சித்திரை செவ்வானம் திரைப்படத்தில் சமுத்திரக்கனியின் மகளாக பூஜா கண்ணன் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகமானார். இவர் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். முதல் படத்துடன் சினிமா எல்லாம் நமக்கு செட் ஆகாது அதையெல்லாம் அக்காவை பார்த்துக் கொள்ளட்டும் என்று பூஜா கண்ணன் நினைத்துள்ளார்.
இவருக்கு தனது காதலர் வினித் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் அதில் பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக வீட்டில் நடந்து முடிந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு முன் நடக்கும் ஹல்தி கொண்டாட்டத்தின் வீடியோவை பூஜா கன்னன் வெளியிட்டு இருக்கிறார். அதில் சாய் பல்லவி கியூட் ஆக பல விஷயங்களை செய்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் மத்தியில் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…