Categories: CINEMA

கல்லைக் கூட நடிக்க வைப்பார் என பெயரெடுத்தவர்… ஆனா விஜய்யை அறிமுகப்படுத்த மறுத்த பாரதிராஜா.. SAC பகிர்ந்த சீக்ரெட்..

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

இயக்குனர் இமயம் என புகழப்படும், சினிமாவில் இயக்குனர் ஆவதற்கு முன் தமிழக அரசின் மலேரியா ஒழிப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர். அந்த காலத்தில் மாதம் ரூ.75 என்ற பெரிய சம்பளத்தை வேண்டாம் என மறுத்துவிட்டு, சினிமா நடிகனாகும் ஆசையில், தனது அம்மா கந்துவட்டிக்கு கடன் வாங்கி கொடுத்த 300 ரூபாயுடன் பல ஆண்டு போராட்டத்துக்கு பின்னர் இயக்குனர் ஆனார்.

அவர் இயக்குனர் ஆனதும் முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார்.  அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.

பாரதிராஜாவிடம் ஒரு கல்லைக் கொடுத்தால் கூட நடிக்கவைத்துவிடுவார் என தமிழ் சினிமாக்காரர்கள் அவரை புகழ்ந்தனர். அதனால் தன்னுடைய மகன் விஜய்யை நடிகராக்க வேண்டும் என இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் முடிவு செய்ததும், அவரை முதலில் பாரதிராஜாவிடம்தான் அழைத்து சென்றாராம்.

அப்போது அவரிடம் “என் மகனை உங்கள் இயக்கத்தில் அறிமுகப்படுத்தவேண்டும்” எனக் கூறியுள்ளார். ஆனால் பாரதிராஜா அதை மறுத்துவிட்டாராம். எஸ் ஏ சியிடம் “நீங்களே பெரிய இயக்குனர். நீங்களே அறிமுகப்படுத்துங்கள்” என சொல்லிவிட்டாராம். இதை பல ஆண்டுகளுக்குப் பிறகு எஸ் ஏ சி ஒரு விழா மேடையில் பகிர்ந்துள்ளார்.

அதன் பிறகு  விஜய் எஸ் ஏ சி இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து பூவே உனக்காக திரைப்படம் மூலமாக திருப்புமுனை பெற்று இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களில் ஒருவராக திகழ்கிறார்.

vinoth

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

7 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

9 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

10 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

10 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

11 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

13 மணி நேரங்கள் ago