#image_title
2009 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான பயங்கர திகில் படம் ‘ஈரம்’. தனது முதல் படத்திலேயே தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார் இயக்குனர் அறிவழகன். ஈரம் திரைப்படத்தில் நடிகர் ஆதி, நடிகை சிந்து மேனன், நடிகர் நந்தா, நடிகை சரண்யா மோகன் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
காதல் கலந்த திரில்லர் படமாக அமைந்த ஈரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இயக்குனர் அறிவழகன் ஈரம் படத்தை தொடர்ந்து வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்த கூட்டணி மீண்டும் இணைந்து, ‘சப்தம்’ எனும் மற்றொரு திரில்லர் படத்துடன் ரசிகர்களை மிரட்ட வந்துள்ளனர். இந்த படத்தில் மீண்டும் ஆதி ஹீரோவாக நடிக்க, நடிகைகள் சிம்ரன், லைலா மற்றும் லட்சுமி மேனன் என 3 நடிகைகள் நடிப்பில் மிரட்டியுள்ளனர்.
முதல் படத்தில் தண்ணீரை வைத்து மிரட்டிய அறிவழகன், இந்த படத்தில் சப்தத்தை வைத்து பயமுறுத்த உள்ளார். டீசரின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமடங்கு கூட்டியுள்ளது. இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அறிவழகன் அடுத்த தரமான சம்பவம் செய்ய ரெடியாகியுள்ளார். மேலும் இப்படம் மூலம் நடிகர் ஆதி தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுப்பாரா..? பொறுத்திருந்து பார்க்கலாம். இதோ ‘சப்தம்’ படத்தின் மிரட்டல் டீசர்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…