தமிழகத்தில் தற்போது திமுக அரசு சார்பாக குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் சமீபத்தில் மகளிர் உரிமைத் தொகை மீண்டும் வழங்கப்பட்டது. இதனிடையே தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் மகளிர் உரிமைத் தொகையை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழு சென்னையில் இன்று கூடுகின்றது. இதில் என்னென்ன அம்சங்களை தேர்தல் வாக்குறுதியாக சேர்ப்பது, மக்களிடம் கருத்து கேட்கும் பயணத்திட்டம் வகுப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சட்டசபை தேர்தலின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனிடையே சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத்தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். இதனை 3000 ரூபாயாக உயர்த்தி தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பரிசீலித்து ஆலோசிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…