சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசன்களில் ஒரே நாளில் ஒரு லட்சம் வரையான பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு 2025 ஆம் ஆண்டில் இரண்டு இன்சூரன்ஸ் திட்டங்களை அறிவித்துள்ளது.
அதன்படி கேரள மாநிலத்திலேயே எந்த இடத்திலும் விபத்தில் உயிரிழந்த ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் வரை விபத்து இன்சூரன்ஸ் வழங்கப்படும். இயற்கையாக மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் போன்ற காரணங்களால் மரணம் அடையும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை நிவாரண தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் நிதி பொது நிவாரண நிதி மூலம் நிர்வகிக்கப்படும் எனவும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தாராளமாக நன்கொடை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உயிரிழந்த பக்தர்களின் உடலை அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளையும் தேவசம் போர்டு மேற்கொள்ளும்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…