#image_title
சிறகடிக்க ஆசை தொடரின் சனிக்கிழமை எபிசோடில் ரோகினி அவருடைய அம்மாவின் அறிவுரைப்படி விஜயாவிடம் சென்று மன்னிப்பு கேட்கிறாள். ஆனால் விஜயா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ரோகினியை தனிமைப்படுத்துகிறார். மனோஜையும் ரோகினி உடன் பேசவிடாமல் செய்கிறார். அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் ரோகினி ரூமில் இருக்கிறாள். அப்போது சுருதியின் அம்மா கால் செய்து என்னம்மா நீ இப்படி பண்ணிட்ட உங்க மாமனாரோட பணத்தை எடுத்து தான் நீ ஷோரூம் வச்சியா அப்படின்னு கேட்கும்போது ரோகிணி டென்ஷனாகி உங்க வேலைய நீங்க பாருங்க எங்க குடும்பத்து பிரச்சனையை நாங்க பார்த்துக்கிறோம் அப்படின்னு போனை கட் செய்து விடுகிறார்.
அடுத்ததாக ரோகினி அம்மா போன் செய்யும் போது அவர் நீ மன்னிப்பு கேட்க சொல்ற நான் கேட்டேன் எதுவுமே நடக்கல என்று கூறிவிட்டு வைத்துவிடுகிறார். அடுத்ததாக மீனாவும் ஸ்ருதியாகவும் கிச்சன் ஏரியா பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபத்துடன் ரோகிணி வெளியே வந்தார். வந்ததும் சுருதி நீங்க எதுக்கு தேவையில்லாத வேலை பண்ணிட்டு இருக்கீங்க எங்க விஷயத்துல யாரும் தலையிட வேண்டாம் என்று திட்டுகிறார்.
சுருதியும் கோபப்பட்டு பதிலுக்கு பதில் பேச நீங்க பண்ண தப்பு எல்லாம் மறந்து போச்சா என்று கூறுகிறார். மீனா இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். அடுத்ததாக விஜயா ரோகினியை வீட்டில் ரூமில் இருக்க சொல்லிவிட்டு மனோஜை மட்டும் தனியாக ஷோரூமுக்கு அனுப்புகிறார். அது ரோகினியை அப்செட் ஆக்கிவிட்டது. அடுத்ததாக இரவு ஆனதும் ரோகினி மனோஜ்க்கு போன் செய்கிறார்.
ஆனால் மனோஜ் போன் எடுக்கவில்லை அதற்கும் விஜயாவுக்கு போன் செய்து அம்மா ரோகினி போன் பண்றா என்று பர்மிஷன் கேட்கிறார். உடனே விஜயா நீ நைட் வீட்டுக்கு வர வேண்டாம் அங்கேயே இரு என்று சொல்லிவிடுகிறார். உடனே அதற்கு பிறகு ரோகிணி போனை எடுத்து மனோஜ் நான் இன்னிக்கு வீட்டுக்கு வரமாட்டேன். வேலை நிறைய இருக்கு யாரையும் நம்ப முடியல என்று சொல்லிவிட்டு வைத்து விடுகிறார்.
விஜயா பிறகு மீனாவிடம் வந்து இன்னைக்கு மனோஜ் வரமாட்டான் நீ சமையல் முடிச்சிட்டியா என்று கேட்கும் போது முடிச்சிட்டேன் அப்படின்னு சொல்கிறார் மீனா. அடுத்ததாக முத்து வீட்டுக்கு வந்து என்ன ஆச்சு மீனா யாரையும் காணோம் அவன் வரலையா என்று கேட்கிறார். உடனே மீனா என்னனு தெரியல அத்தை வந்து மனோஜ்கிட்ட ரோகிணியை பேச விடமாட்டேன் என்கிறார்கள். சாப்பிடாம வேற இருக்காங்க நான் வேணா போய் சாப்பாடு கொடுக்கட்டுமா என்று கேட்கிறார். உடனே முத்து பார்த்தியா மீனா பசியில இருந்தவங்களுக்கு தான் இந்த அருமை தெரியும் ஆனால் பலருக்கு அது தெரியல என்று கூறுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…