Categories: சினிமா

வாலி கிட்ட போய் உங்க கிறுக்குத்தனத்த காட்டலாமா?… ஒரே பதிலால் கப்சிப் என வாயை மூடிக்கொண்ட நிரூபர்!

Spread the love

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.

திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார். அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் எம் ஜி ஆர் வாலியை தன்னுடைய ஆஸ்தான கவியாக மாற்றிக் கொண்டார்.

எம் ஜி ஆருக்கு அழகான தத்துவப் பாடல்கள் மற்றும் துள்ளலிசை பாடல்களை எழுதிக் கொடுத்த வாலி, அதன்  பின்னர் இளையராஜா வருகையின் போது ரஜினி கமல் ஆகியோருக்கும் முத்தானப் பாடல்களைக் கொடுத்து, கடைசியாக சிவகார்த்திகேயனுக்கும் பாடலெழுதினார்.

இந்நிலையில் ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் வாலியை சீண்டும் விதமாக ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அவரிடம் “உங்களுக்கு ஏன் வாலி என்று பெயர் வைத்துக் கொண்டீர்கள்” எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் “’எனக்கு நேரா இருக்கிறவங்களோட அறிவில் பாதி எனக்கு வந்துரும்னு தான் அப்படி பேரு வச்சிருக்கேன்’ என்றார். எப்படி ராமாயணத்தில் வாலிக்கு எதிராக யார் நின்று போரிட்டாலும் அவர்களின் பலத்தில் பாதி வாலிக்கு வந்து விடுமோ அதுபோல என்னெதிரில் இருப்பவர்களின் அறிவில் பாதியை நான் எடுத்துக் கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.

அதைக் கேட்ட அந்த நிரூபர் “அப்படியொன்றும் இன்னும் உங்களுக்கு அறிவு வந்தது மாதிரி தெரியவில்லையே?’ எனக் கேட்டுள்ளார். அதைக் கேட்டு சற்றும் கோபப்படாத வாலி “அப்படியென்றால் நீங்கள் எல்லோரும் அறிவாளிகள் இல்லை. முட்டாள்தான் போலிருக்கிறது” என ஒரே போடாக போட்டுள்ளார். இதைக் கேட்ட அந்நபர் அமைதியாக சென்றுவிட்டாராம்.

vinoth

Recent Posts

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

1 minute ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

2 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

6 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

8 minutes ago

“10 நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”…. NDMA-விடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாடு அரசு…. வைரலாகும் ஷாக் ரிப்போர்ட்….!

அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…

10 minutes ago

“என்னை போட்டுத் தள்ள பார்க்குறாங்க”… திமுகவை நாங்கதான் ஜெயிக்க வச்சோம்…. அமைச்சர் விஸ்வநாதனின் பகீர் வாக்குமூலம்…. கூட்டணிக்குள் விழுந்தது பேரிடி….!

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…

14 minutes ago