ஆகாஷ் வழக்கில் அதிரடி கிளைமாக்ஸ்.. “எங்க பாரம்பரிய முறைப்படி தான் செய்வோம்…” போலீசாருடன் மல்லுக்கட்டிய உறவினர்கள்.. இறுதியில் நடந்தது என்ன?.. தத்தனேரி மயானத்தில் பதற்றம்..!!!

Spread the love

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபர் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லாக்-அப் மரணம் என குற்றம்சாட்டிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், இந்த மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என உறுதியாகக் கூறி, கடந்த 100 நாட்களுக்கும் மேலாக உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த விவகாரம் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதோடு, அந்தப் பகுதியில் பதற்றமான சூழலையும் நீடிக்கச் செய்தது. இந்த விவகாரத்தை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, கோரிக்கைகள் பெருமளவு நிறைவேற்றப்பட்ட பிறகும் உடலை வாங்க மறுப்பது ஏற்கத்தக்கதல்ல என்று கண்டனம் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெற்றோர்கள் உடலை வாங்கத் தவறினால் மாவட்ட நிர்வாகமே இறுதிச்சடங்குகளை நடத்த உத்தரவிட்டது. நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்தும் பெற்றோர் வராததால், மதுரையின் தத்தனேரி மின் மயானத்தில் உடலை அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் நீதிமன்றம் இறுதி உத்தரவைப் பிறப்பித்தது. இன்று காலை காவல்துறையினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்த போது, தங்களின் பாரம்பரிய முறைப்படிதான் உடலைத் தகனம் செய்ய வேண்டும் என்று கூறி ஆகாஷின் உறவினர்கள் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆகாஷின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டு, 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்த சர்ச்சை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

Muthu Mani

Recent Posts

மனசாட்சியே இல்லையா?… சந்தேகத்தால் வெடித்த விபரீதம்… மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்… அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…

11 minutes ago

அட கடவுளே… போன் கொடுத்து உதவியது குத்தமா?… 2.5 ஆண்டுகள் சிறையில் வாடிய தொழிலாளி… உயிருடன் திரும்பி வந்து காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்…!

கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு செல்போன் கொடுத்து உதவிய 36 வயது கட்டிடத் தொழிலாளி, அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்…

17 minutes ago

அடகொடுமையை..! காட்டுக்குள் 12 வயது சிறுமி கடத்தல்… கொடூரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… தப்பிக்க முயன்ற போது நடந்தது என்ன?… பரபரப்பு பின்னணி…!!

காட்டுப் பகுதிக்கு 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

18 minutes ago

லேட்டஸ்ட் வார்னிங்!… இன்னும் 3 வருஷம் தான் டைம்!… ரோபோக்கள் கையில் உலகமா?… மனிதர்களை மிஞ்சும் இயந்திரங்கள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலகெங்கும் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அது எதிர்காலத்தில் மனித…

27 minutes ago