ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அக்டோபர் 3 அன்று நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, திடீரெனப் பலத்த புயலுடன் கூடிய கனமழையும் ஆலங்கட்டி மழையும் வெளுத்து வாங்கியது. இதில் திருமண மண்டபத்தின் கூரை மீது அதிகளவில் மழைநீரும் ஆலங்கட்டிகளும் தேங்கியதால், அதன் ஒரு பகுதி எடையும் தாங்காமல் கீழ்நோக்கிச் சரியத் தொடங்கியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள், தங்களின் ஆடம்பர ஆடைகளையும் பொருட்படுத்தாமல், அங்கிருந்த மர நாற்காலிகளைக் கைகளில் ஏந்தி கூரையை மேல்நோக்கித் தாங்கிப் பிடித்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர். இந்த விநோதமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீசிய இந்தப் புயலால் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டு மீட்புக் குழுவினருக்கு 180-க்கும் மேற்பட்ட உதவி அழைப்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
குருகிராமில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் சக்தி தரணி பாண்டே என்ற பெண், தனது மாதச் சம்பளத்தில் 50…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் ஹஜிரா பகுதியில் உள்ள ஒரு துரித உணவுக் கடையில், 18 வயது இளைஞர் ஒருவர்…
அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ், மேரிலாந்தில் உள்ள 'ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ்' தளத்தில் ஹெலிகாப்டரில்…
பிரபல யூடியூபரான அனுராக் டோப்ஹால் சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் கூறிய குற்றச்சாட்டுகளை அவரது மனைவி ரித்திகா சௌஹான் வன்மையாகக் கண்டித்துள்ளார்.…
கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பயின்று வந்த மாணவி நிமிஷா தகுரியா, அசாரா புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி…
லாரி அவர்களை நெருங்கிய அந்த ஒரு வினாடியில், அங்கிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று உணர்வதற்கு முன்பே அதிர்ச்சியில் உறைந்து போய்…