தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்து வாக்கு எண்ணிக்கைக்காகக் காத்திருக்கும் வேளையில், திமுகவின் அதிகார மையமான அண்ணா அறிவாலயத்தில் அரங்கேறிய ரகசிய விசாரணை ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு முக்கிய மாவட்டங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள், தங்கள் சொந்தக் கட்சியினரே தங்களுக்கு எதிராக ‘உள்ளடி’ வேலைகளில் ஈடுபட்டதாகத் தலைமைக்கு அதிரடிப் புகார்களை அனுப்பியுள்ளனர். இதன் பின்னணியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வேட்பாளர்கள் கொட்டித் தீர்த்த தகவல்கள் மூத்த அமைச்சர்களை அதிர வைத்துள்ளது.
குறிப்பாக, பெரம்பூர் தொகுதி வேட்பாளர் ஆர்.டி. சேகர் முன்வைத்த புகார்கள் கூட்டத்தில் அனலைப் பறக்கவிட்டுள்ளன. உதயநிதியின் நேரடி மேற்பார்வையில் இருந்த தொகுதிகளிலேயே, கடைசி மூன்று நாட்களில் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்காமல் முடங்கியது தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. “துரோகிகளின் பெயர்களைத் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கிறேன்” என்று வேட்பாளர்கள் ஆவேசப்பட்ட நிலையில், தேர்தல் பணிகளில் தொய்வை ஏற்படுத்திய நிர்வாகிகள் யார் என்ற பட்டியல் தற்போது ஸ்டாலினின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் மூத்த அமைச்சர்களான சேகர்பாபு, தா.மோ. அன்பரசன், ஆவடி நாசர் மற்றும் சுதர்சனம் ஆகியோருக்கு எதிராகப் பெரும்பாலான புகார்கள் திரும்பியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கசிகின்றன. மாவட்டப் பொறுப்பாளர்களாகவும், அமைச்சர்களாகவும் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வேட்பாளர்களுக்கு முட்டுக்கட்டை போட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முதல்வர் ஸ்டாலினை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு உதயநிதி துபாய் சென்றிருந்தாலும், கிளம்புவதற்கு முன்பே இந்த உள்ளடி விவகாரங்கள் குறித்து முதல்வரிடம் விரிவான அறிக்கை அளித்தே சென்றதாகத் தெரிகிறது.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கணிக்கப்பட்டாலும், சொந்தக் கட்சியினரின் இந்தத் துரோகம் திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய இந்த ஆய்வுக் கூட்டத்தின் எதிரொலியாக, கட்சிக்கு விசுவாசமாகச் செயல்படாத சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு ‘கல்தா’ கொடுக்கப்படலாம் என்ற தகவல் அமைச்சரவை சகாக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…
யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…
கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா…