ரேஷன் அட்டைதாரர்களே ரெடியா?… தமிழகம் முழுவதும் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை… மிஸ் பண்ணிடாதீங்க…!

Spread the love

தமிழகம் முழுவதும் சுமார் 36,000 நியாயவிலை கடை செயல்பட்டு வரும் நிலையில் 2 கோடி 27 லட்சம் ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ரேஷன் அட்டைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகப்பு மற்றும் நிவாரணம் என ஏராளமான உதவிகள் ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு மட்டும் கிடைக்கின்றன. இதனிடையே ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது.

இந்த சிரமத்தை குறைப்பதற்காக தமிழக அரசு பொது மக்களுக்கு உதவும் வகையில் ஒரு சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி டிசம்பர் 13 நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் பிரதி மாதம் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் மற்றும் தொலைபேசி எண் மாற்றம் செய்தல் ஆகிய சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“16-வது நாள் காரியத்திற்கு வந்த குடும்பத்தினர்”… மயானத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை….!

கோவையில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை ஒரு கும்பல் நள்ளிரவில் தோண்டி எடுத்து, அதனுடன் வைக்கப்பட்டிருந்த மூன்றரை சவரன் தங்க நகையைத்…

10 seconds ago

அம்மாவுக்கு கொடுத்த முதல் கிபிட்… CM விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி…? 30 ஆண்டாகத் தாய் ஷோபா பாதுகாக்கும் நெகிழ்ச்சிப் பரிசு…!

தமிழக முதல்வரும், முன்னாள் பிரபல நடிகருமான சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தாயார் ஷோபா…

3 minutes ago

காலையிலேயே ஷாக்..! பதவியை ராஜினாமா செய்யும் செல்வப்பெருந்தகை…? அதிர்ச்சியில் காங்கிரஸ்..!!

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்களைச் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை…

4 minutes ago

திடீர் திருப்பம்… மீண்டும் திமுக – காங்கிரஸ் கூட்டணி.. தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் அந்த ஒரு ட்வீட்….!

தமிழக அரசியலில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ள திமுகவும், தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த…

5 minutes ago

ரூ .8 கோடி மோசடி செஞ்ச உனக்கு TVK பாதுகாப்பாடா.? சொந்த கட்சி எம்எல்ஏ-வை போனில் வெளுத்து வாங்கிய பிரமுகர் – வைரலாகும் ‘பீப்’ ஆடியோ…!!

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அக்கட்சியினரின் பல்வேறு செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி வருகின்றன. அந்த வகையில்,…

11 minutes ago

அதிமுகவிலிருந்து தவெகவிற்கு செல்வோர் கொள்ளைக்காரர்கள்… அழிவு நிச்சயம்.. ஜான் பாண்டியன் அதிரடி…!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து விலகுவதாக அறிவித்துள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களைச்…

18 minutes ago